இந்து இனப்படுகொலை நினைவு சின்னம் அமைக்கப்படும்.. இந்தியா-அமெரிக்கா உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன்..

2024 ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இந்தியா உடனான அமெரிக்கா உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன் என முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ ரிசார்ட்டில் குடியரசு இந்து கூட்டணி (RHC) ஏற்பாடு செய்த தீபாவளி விழாவில் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்டார். பின்னர் பேசிய ட்ரம்ப், இந்துக்கள், இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோருடன் ஒரு சிறந்த உறவை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், RHC நிறுவனர் ஷலப் குமாரை இந்தியாவுக்கான தூதராக நியமிப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார். கடந்த வெள்ளி அன்று தீபாவளி வரவேற்பு அறையில் ட்ரம்ப் பேசிய வீடியோவை குடியரசு இந்து கூட்டணி செவ்வாய் கிழமை வெளியிட்டது.

தனக்கு இந்துக்களிடம் இருந்தும் இந்தியாவிலிருந்தும் பெரும் ஆதரவு இருந்தது. வாஷிங்டன் டி.சி.யில் ஒரு இந்து இனப்படுகொலை நினைவுச்சின்னம் கட்டும் யோசனையை நான் முழுமையாக ஆங்கீகரித்தேன். அதற்கு இது சரியான நேரம் என நினைக்கிறேன். நாங்கள் அதை செய்ய போகிறோம் என ட்ரம்ப் தெரிவித்தார்.

பின்னர் பேசிய RHC நிறுவனர் ஷலப் குமார், ட்ரம்ப் இந்து சமூகத்திற்கு ஒரு வலுவான நண்பராக இருந்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு அதிகாரமளிப்பதற்கும் தைரியமூட்டுவதற்கும் பல ஆண்டுகளாக ட்ரம்ப் செய்த சாதனைகளை பற்றி RHC பெருமிதம் கொள்கிறது என தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டில் இந்தியா-அமெரிக்கா உறவு புதிய முன்னேற்றத்தை அடைந்தது. ட்ரம்ப் நிர்வாகம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை இந்தோ-பசிபிக் என மறுபெயரிட்டார். இது முழு பிராந்தியத்திலும் இந்தியாவுக்கு அதிக பங்கை அளித்தது. மேலும் ஆப்கானிஸ்தானில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என முதன் முறையாக கூறியதாக குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.