இந்தியாவிற்கு வணக்கம் செலுத்துகிறேன்.. இந்தியாவின் வெளியுறவு கொள்கை சிறப்பானது.. பாராட்டிய இம்ரான்கான்..

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த பொதுகூட்டத்தில், தனது அரசியல் எதிர்கட்சிகளை கடுமையாக சாடிய கான், இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாராட்டினார்.

கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், தனது அரசியல் எதிர்கட்சியான நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகனான ஷாபாஸ் ஷெரீப்பை கடுமையாக விமர்சித்தார். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவை கண்டிக்கும்படி என்னிடம் கேட்டபோது, நான் அவர்களிடம் கேட்டேன். அதே கேள்வியை இந்தியாவிடம் கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? அமைதிக்காக தான் பாகிஸ்தான் உங்களுடன் இருக்கிறது. போருக்காக அல்ல என கூறினார்.

மேலும் பாகிஸ்தான் குடிமக்களின் முன்னேற்றத்திற்காக முன்னுரிமை அளிக்கும் வெளியுறவு கொள்கைக்காக தான் பாடுபடுவதாக குறிப்பிட்ட கான், இந்தியாவின் வெளியுறவு கொள்கையை உதாரணம் காட்டினார். அவர் கூறுகையில், நமது அண்டை நாடான இந்தியாவிற்கு வணக்கம் செலுத்துகிறேன். அவர்கள் எப்போதும் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பேணி வருகிறார்கள்.

குவாட் கூட்டணியில் இந்தியா உறுப்பினராக உள்ளது, அதன் உறுப்பினர்களில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. ஆனால் இந்தியா இன்னும் நடுநிலை என சொல்லி கொண்டு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறார்கள். ஏனென்றால் இந்தியாவின் வெளியுறவு கொள்கை அதன் மக்களுக்கானது என இம்ரான்கான் கூறினார்.

Also Read: பெரும்பான்மையை இழந்த இம்ரான்கான்..? பிரதமர் பதவியை ராஜினாமா செய்யகோரி நெருக்கடி..

இந்திய இராணுவம் மற்றும் இந்திய அரசு குறித்து கூறிய இம்ரான்கான், பாகிஸ்தானை விட இந்தியாவின் வெளியுறவு கொள்கை சிறந்தது. அவர்கள் தங்கள் மக்களுக்காக உழைக்கிறார்கள். இந்திய இராணுவம் ஊழல் செய்யவில்லை. சிவில் அரசாங்கத்தில் அவர்கள் தலையிட மாட்டார்கள் என பாகிஸ்தான் அரசாங்கத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் தலையீடு குறித்து மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

நான் யாருக்கும் முன்னால் தலைவணங்கவில்லை, என் தேசத்தையும் தலைவணங்க விடமாட்டேன் என்று கூறிய கான், நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள நம்பிகையில்லா தீர்மானத்தை தோற்கடிப்பேன் என கூறியுள்ளார்.

Also Read: இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தோல்வி..?

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைக்கு இணங்கி இருந்தால் பாகிஸ்தானுக்கு எதுவும் கிடைத்திருக்காது என குறிப்பிட்ட கான், நாங்கள் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரில் ஒரு பகுதியாக இருந்தால் 80,000 மக்களையும், 100 பில்லியன் அமெரிக்க டாலரையும் இழந்தோம் என கூறியுள்ளார். இம்ரான்கானுக்கு எதிராக தேசிய சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று கூட உள்ள நிலையில் மார்ச் 25 அல்லது 28 அன்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.