நாட்டின் முதல் டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை தயாரிக்க உள்ள ஐதராபாத் நிறுவனம்..!

நாட்டின் முதல் உள்நாட்டிலேயே தாயாரிக்கப்பட்ட அசிபல் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையானது VEM டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் 2024-2025 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்படும் என தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் வி.வெங்கட் ராஜூ தெரிவித்துள்ளார்.

VEM டெக்னாலஜிஸ் நிறுவனம் தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தின் ஜஹீராபாத்தில் உள்ள தேசிய முதலீட்டு உற்பத்தி மண்டலத்தில் தனது நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கியது. இந்த விழாவில் தெலுங்கானாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கே.டி.ராமராவ அடிக்கல் நாட்டினார்.

VEM டெக்னாலஜிஸ் நிறுவனம் முதல்கட்டமாக 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இந்திய இராணுவத்திற்கு வழங்குவது மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு பாதுகாப்பு இயந்திரங்களை ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேசிய முதலீட்டு உற்பத்தி மண்டலமானது தலைநகர் ஹைத்ரபாத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தெலுங்கானா மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது இந்த ஆண்டு ஜனவரியில் VEM டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு 511 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கியுள்ளது. நிறுவனம் இறுதியில் 20 மில்லியன் சதுர அடியில் 40 கிமீ உள் சாலைகள் மற்றும் 10,000 மரகன்றுகளுடன் பசுமை போர்வைகளை உருவாக்க உள்ளது.

VEM டெக்னாலஜிஸ் ஆண்டுக்கு 10,000 ஏவுகணை அமைப்புகளை உருவாக்குவதற்கான உரிமம் உள்ளதாக அதன் தலைவர் வி.வெங்கட் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் VEM டெக்னாலஜிஸ் என்பது மேக் இன் இந்தியா திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறியுள்ளார். இந்த நிறுவத்தின் மூலம் சுமார் 2,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 4,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

VEM டெக்னாலஜிஸ் டாங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள், சிறிய ஆயுதங்கள், எலக்ட்ரானிக்ஸ், சென்சார்கள், சர்வோ சிஸ்டம்ஸ், ஆன்போர்டு கம்ப்யூட்டர்கள், மூன்று வகையான அகச்சிவப்பு, லேசர் மற்றும் RF சீக்கர், ஏவுகணை அமைப்புகள் போன்ற உபகரணங்களை உருவாக்கும் என கூறப்பட்டுள்ளது.

Also Read: மலேசிய போர் விமான ஆர்டருக்கான போட்டியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலை..!

மேலும் இலகுரக போர் விமானத்திற்கான பிரதான உடற்பகுதியை உருவாக்க 1,000 அடி நீளமான ஹேங்கர் வசதி மற்றும் மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களுக்கான ஏர்ஃபிரேமை உருவாக்க உள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர துப்பாக்கிகளை தயாரிப்பதற்காக அமெரிக்காவை தளமாக கொண்ட ஒரு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

Also Read: லக்னோ ஆலையில் ஆண்டுக்கு 100 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்க திட்டம்..?

மற்றொரு வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒரு ட்ரோன் அமைப்பையும் மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளதாகவும், 2029 ஆம் ஆண்டளவில் எங்கள் நிறுவனம் ஒரு போர் விமானத்தை ஒருங்கிணைக்கும் வகையில் சில நிலைகளை உருவாக்க விரும்புகிறது என வெங்கட் ராஜு தெரிவித்துள்ளார். 18.5 கிலோ எடையுள்ள இந்த டாங்கி எதிர்ப்பு ஏவுகணை 2.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க கூடியது.

Also Read: பிரம்மோஸ், ஆகாஷ் வான் பாதுகாப்பு மற்றும் ரேடார்களை வாங்க உள்ள வியட்நாம்..?

Leave a Reply

Your email address will not be published.