பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை..
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜீலம் நகரில் கர்ப்பிணி பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலிசாரின் கூற்றுப்படி, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜீலம் நகரில் வசித்து வரும் கர்ப்பிணி பெண்ணின் வீட்டில் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், கர்ப்பிணி பெண்ணின் கணவரை தாக்கி கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் கர்ப்பிணி பெண்ளை ஐந்து பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண், தானாகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை மருத்துவமனை ஊழியர்களிடம் விவரித்ததை அடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் போலிசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் கர்ப்பிணி பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவரது இரத்த மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்காக லாகூருக்கு அனுப்பப்பட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் காவல்துறை சிறப்பு படையை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறது. பஞ்சாப் ஐஜிபி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு முன்பு கடந்த மாதம் கராச்சியில் ஓடும் ரயிலில் 25 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
Also Read: பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது: ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் மனித உரிமையின்ஆணையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, பாகிஸ்தானில் தினமும் குறைந்தது 11 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகின்றன. 2015 முதல் 2021 வரையிலான கடந்த 6 ஆண்டுகளில் 22,000 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.
Also Read: இந்தியா சுதந்திரமாக உள்ளது. ஆனால் நாங்கள் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம்: இம்ரான்கா
கடந்த ஆண்டு வெளியான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2021 ன் படி, பாலின சமத்துவ குறியீட்டில், 156 நாடுகள் கொண்ட பட்டியலில் பாகிஸ்தான் 153 வது இடத்தை பிடித்துள்ளது. அதாவது கடைசி 4 நாடுகள், பெண்களின் உரிமைகளில் மோசமான குறியீடாகும். அதிகமாக பஞ்சாப் மாகாணத்தில் தான கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
Also Read: ஹனிட்ராப் மூலம் இந்திய இராணுவ ரகசியங்களை திரட்ட 300 இளம்பெண்களை பணியமர்த்திய பாகிஸ்தான் உளவுத்துறை..