ஜெய்ஷ்-இ-முகமது கமாண்டரை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்..?

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டதற்காக தடைசெய்யப்பட்ட இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கமாண்டர் ஆஷிக் அகமது நெங்ரூவை பயங்கரவாதியாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள் அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவலில் நெங்ரூ ஈடுபட்டுள்ளதாகவும், பல்வேறு பயங்கரவாத சம்பவங்களை நடத்தவதற்கும் நெங்ரூ காரணமாக இருந்ததாவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நெங்ரூ காஷ்மீரில் ஒரு சிண்டிகேட்டை நடத்தி வருவதாகவும், இப்போது பாகிஸ்தானில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை திட்டமிடுவதற்கான ஆபத்தான பிரச்சாரத்தில் நெங்ரூ ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவின் பாதுகாப்பிற்கு நெங்ரூவால் ஏற்படும் ஆபத்தை கருத்தில் கொண்டும், பயங்கரவாத செயல்களில் இருந்து அவரை தடுக்கும் நோக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967 (37) விதிகளின் கீழ் நெங்ரூவை பயங்கரவாதியாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Also Read: ISIS அமைப்புக்கு ஆட்சேர்ப்பு.. கர்நாடகாவை சேர்ந்த மூன்று பேரை கைது செய்த NIA..?

இதனை அடுத்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக காவலர்கள் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Also Read: ரஷ்யா உடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து..?உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு..

Leave a Reply

Your email address will not be published.