இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும்: கர்நாடக முதல்வர் அறிவிப்பு
கர்நாடகாவில் உள்ள இந்து கோவில்கள் மற்றும் மத நிறுவனங்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க புதிய மசோதாவை கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருவதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு இந்து கோவில்களை சட்டங்கள் மற்றும் விதிகளில் இருந்து விடுவிக்கும் என்றும், சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக இதற்கான மசோதாவை மாநில அரசு கொண்டுவரும் என முதல்வர் தெரிவித்தார்.
ஹூப்ளியில் இரண்டு நாள் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்து கோவில்களை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். மசோதாவை கொண்டு வருவதற்கான முதன்மை இலக்கு கோயில் நிர்வாகங்கள் தங்கள் வருமானத்தை கோவில் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும்.
மேலும் மாநில அரசிடம் அனுமதி வாங்க வேண்டிய கட்டாய விதிகளை நீக்குவதாகும் என தெரிவித்துள்ளார். புதிய மசோதா மூலம் கோவில்கள் செயல்படுவதற்கு சில விதிமுறைகள் மட்டுமே இருக்கும். அவற்றின் மீது அரசின் கட்டுப்பாடு இருக்காது. கர்நாடகாவில் உள்ள கோவில்கள் தங்கள் விவகாரங்களை சுதந்திரமாக நிர்வகிக்க முடியும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
Also Read: அன்னை தெரேசா அறக்கட்டளையின் வங்கி கணக்கு முடக்கம்..? மதமாற்றம் காரணமா..? கொந்தளித்த மம்தா பானர்ஜி..
இது ஒரு வரலாற்று முடிவு, அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் கைகளால் பாதிக்கப்பட்ட கோவில்கள் விடுவிக்கப்படும். இனி அவர்கள் தங்கள் வளர்ச்சியை தாங்களே பார்த்து கொள்வார்கள் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். சமீபத்தில் உத்தரகாண்ட் அரசும் கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தது.
Also Read: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 6 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது..?
சர்தாம் தேவஸ்தான வாரியத்தை ரத்து செய்து, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 51 கோவில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டன. கர்நாடகா அரசு சில நாட்களுக்கு முன்பு மதமாற்ற தடை சட்டத்தையும் கொண்டு வந்தது. மதமாற்ற எதிர்ப்பு மசோதா சட்டமாக மாறுவது மட்டுமின்றி அதனை முறையாக அமல்படுத்த சிறப்பு பணிக்குழுவும் அமைக்கப்படும் என செயற்குழு கூட்டத்தில் முதல்வர் கூறியுள்ளார்.
Also Read: இந்து இளைஞனை திருமணம் செய்த முஸ்லிம் பெண்.. பஞ்சாப்-ஹரியானா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..