ஹிஜாப் சர்ச்சை: கர்நாடகா மாணவியை பாராட்டிய அல்கொய்தா தலைவர்..!

கர்நாடகா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அல் கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி வீடியோ ஒன்றை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் உடுப்பி மாவட்டம் குந்தப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவிகளும் பள்ளி, கல்லூரிக்கு காவி துண்டு அணிந்து வந்தனர்.

இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வந்து அல்லாஹூ அக்பர் என கோஷம் எழுப்பியதால் பதிலுக்கு இந்து மாணவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்பினர். ஹிஜாப் அணிந்து வர அனுமதிகோரி இஸ்லாமிய மாணவர்கள் தொடர்ந்த வழக்கு மற்றும் ஹிஜாபை தடை செய்ய கோரி இந்து அமைப்புகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் பள்ளிகளில் சீருடை மட்டுமே அணிய வேண்டும் என கூறி ஹிஜாப் அணிய தடை விதித்தது.

Also Read: ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை 43 சதவீதம் அதிகரித்துள்ள அமெரிக்கா..?

இந்த தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஹிஜாப் மறுக்கப்பட்டதால் 10,000 மேற்பட்ட இஸ்லாமிய மாணவ மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர். எங்களுக்கு மதம் தான் முக்கியம், தேர்வு இரண்டாம் பட்சம் தான் என கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி, கர்நாடகா மாணவி முஸ்கானை பாராட்டியுள்ளார். அல்லாஹூ அக்பர் என கூறியதற்காக அல் கொய்தா தலைவர் முஸ்கானை பாராட்டியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

Also Read: இந்தியாவிற்கு பேரலுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க உள்ளதாக ரஷ்யா அறிவிப்பு..

மேலும் முஸ்கானை இந்தியாவின் உன்னத பெண் என கூறி பாராட்டியுள்ளார். இந்து ஜனநாயகத்தின் ஏமாற்று வேலைக்கு மயங்கி விடாதீர்கள். இந்துத்துவா இஸ்லாமியர்களை ஒடுக்கும் ஒரு உபகரணமேயின்றி வேறில்லை என கூறியுள்ளார். மேலும் இந்து தெய்வ வழிபாட்டாளர்கள் அடங்கிய கும்பலின் மிரட்டலுக்கு அடிபணியாமல் அல்லாஹூ அக்பர் என கூறிய முஸ்கானுக்கு அல்லாஹ் வெகுமதி அளிக்கட்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.