ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் ஹெலினா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த விமானப்படை

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து சோதனை நடத்திய ஹெலினா ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக DRDO தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் செக்டாரில் உள்ள ALH துருவ் ஹெலிகாப்டரில் இருந்து ஹெலினா டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டன.

இந்த ஏவுகணை 5 வகைகள் உள்ளன. இது குறைந்தபட்சம் 7 கி.மீ. மற்றும் அதிகபட்ச எல்லைகளில் ஏவுகணைத் திறனை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்டதாக DRDO அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட Derelict டேங்கிற்கு எதிராக இந்த இறுதி கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது. துருவ் ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட 4 ஏவுகணைகளும் இலக்கை துல்லியமாக தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் HAL ருத்ரா மற்றும் இலகு ரக போர் ஹெலிகாப்டர்களில் இருந்தும் சோதனை செய்ய தயாராக உள்ளது.

ஹெலினா ஏவுகணையானது மூன்றாம் தலைமுறை infra-red seeker டாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும். இது அனைத்து வானிலை பகல் மற்றும் இரவு நேரத்திலும் இயங்கும் திறன் கொண்டது. மேலும் இந்த ஏவுகணை நேரடி தாக்குதல்(Direct attack mode) மற்றும் மேல் தாக்குதல்(Top attack mode) முறையிலும் ஈடுபடுத்த முடியும்.

இந்த ஏவுகணையின் இந்திய விமானப்படையின் பெயர் துருவ்வஸ்த்ரா(Dhruvastra). கிழக்கு லடாக் பகுதியில் சீனா உடனான மோதலுக்கு பிறகு, ஹெலிகாப்டர் மூலம் ஏவப்பட்ட ஏவுகணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *