தான் ஒருநாளும் பிரதமர் ஆவேன் என கனவிலும் நினைத்ததில்லை – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி 20 வருடம் பொது வாழ்க்கையை நிறைவு செய்த நிலையில் தான் ஒரு நாளும் பிரதமர் ஆவேன் என நினைத்ததில்லை என எய்ம்ஸ் ரிஷிகேஷில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் உத்ராகாண்ட் முதல்வர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய பிரதமர், பல தசாப்தங்களுக்கு முன்பு எனது பொதுவாழ்க்கை பணி ஆரம்பித்தது. 2001 ஆம் ஆண்டு குஜராத் முதல்வரானேன். பின்னர் 2014 ஆம் ஆண்டு மக்களின் ஆதரவோடு பிரதமர் ஆனேன். தான் பிரதமர் ஆவேன் என கனவிலும் நினைத்ததில்லை என பிரதமர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி PM CARES நிதியின் கீழ் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 35 ப்ரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் ஆக்சிஜன் ஆலைகளை நாட்டுக்கு அர்பணித்தார். ரிஷிகேஷியில் இருந்து பொது சேவையின் 21 ஆம் ஆண்டில் நுழைவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Also Read: இந்தியாவின் வளர்ச்சி நிலையானது.. இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை உயர்த்திய மூடிஸ்..

கொரோனா தொற்றின் போது நாடு முழுவதும் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களை பிரதமர் பாராட்டினார். மேலும் CoWIN தளத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் உலகிற்கு முன்மாதிரியாக திகழ்வதாக பிரதமர் கூறினார்.

Also Read: இந்தியாவின் ஏற்றுமதி முதல்முறையாக 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து சாதனை..

அதிக தடுப்பூசியை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு வணிக ரீதியில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் பின்தங்கிய நாடுகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கியதையும் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த ஆக்சிஜன் ஆலைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகுக்கும்.

Also Read: இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டேன்: ஐநா பொதுச்சபை தலைவர் அப்துல்லா ஷாகித்

Leave a Reply

Your email address will not be published.