உள்நாட்டு பயிற்சி விமான என்ஜின்களுக்காக 100 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட HAL..

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது இந்துஸ்தான் டர்போ டிரெய்னர்-40 பயிற்சி (HTT-40) விமானத்தை மேம்படுத்த அமெரிக்காவின் ஹனிவெல்லுடன் 100 மில்லியன் டாலர் மதிப்பில் 88 இன்ஜினுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த விமானத்தின் மூலம் இந்திய இராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த HTT-40 பயிற்சி விமானம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. இந்த விமானம் TPE331-12 இன்ஜினால் இயக்கப்படும்.

HTT-40 பயிற்சி விமானத்தை இயக்குவதற்கு பராமரிப்பு மற்றும் ஆதரவுடன் 88 TPE331-12 என்ஜின்கள்/கிட்களின் விநியோகம் மற்றும் உற்பத்திக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன. HTT-40 என்பது இந்திய விமானப்படையின் முதன்மையான பயிற்சி விமானமாகும்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இரண்டு முன்மாதிரி பயிற்சி விமானங்களை தயாரித்துள்ளது. HTT-40 ன் முதல் விமானம் 2016 ல் தயாரிக்கப்பட்டது. ஒரு முன்மாதிரி விமானம் லித்தியம் அயன் பேட்டரிகளால் இயக்கப்படுகிறது. ஆசிய கண்டத்தில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் இயக்கப்படும் முதல் இராணுவ விமானம் HTT-40 என கூறப்படுகிறது.

மற்றொரு விமானம் 1,100 குதிரைத்திறன் கொண்ட ஹனிவெல் TPE331-12 இன்ஜின் பொருத்தப்பட்ட விமானம் ஆகும். HTT-40 விமானத்தின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 400 கிலோமீட்டர் மற்றும் 6,000 மீட்டர் உயரம் வரை பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் இராணுவத்திற்கு 106 யூனிட்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

106 யூனிட்களும் 2030 ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தலைவர் ஆர்.மாதவன் மறறும் ஹனிவேல் மூத்த இயக்குனர் எரிக் வால்டர்ஸ் மற்றும் E & IMGT நிர்வாக இயக்குனர் கிருஷ்ண குமார் ஆகியயோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ந்திய விமானப்படையின் அடிப்படை பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்ய இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் HTT-40 யை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்திய விமானப்படைக்கு 70 விமானங்கள் தேவைப்படலாம் என மாதவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.