DRDO உடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை AMCA போர் விமானத்தை உருவாக்கி வரும் HAL..

HAL நிறுவனம் தேஜஸ் மார்க் 2 மற்றும் ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) தயாரிப்பில் DRDO உடன் இணைந்துள்ளது. தேஜஸ் மார்க் 2 போர்விமானத்தின் வடிவமைப்பு தொடர்பான CDR சமர்பிக்கப்பட்டதை அடுத்து இந்திய விமானப்படை தேஜஸ் மார்க் 2 போர் விமானத்திற்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் AMCA போர் விமானத்திற்கு விரிவான வடிவமைப்பு மதிப்பாய்வை (CDR) இன்னும் முடியவில்லை. இந்த டிசம்பரில் அதன் CDR முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வடிவமைப்பு தயாராகி விடும் என கூறப்படுகிறது.

CDR என்பது ஒரு விமானத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கியமான படியாகும். விமானத்தை தயாரிப்பதற்கும் சோதனை செய்வதற்கும் தயாராக உள்ளதா என்பதை ஆராய இந்த CDR முக்கியமானதாகும். தேஜஸ் மார்க் 2 போர் விமானத்திற்கு CDR சமர்பிக்கப்பட்டு விட்ட நிலையில் AMCA போர் விமானத்திற்கு CDR இன்னும் வடிவமைக்கப்படவில்லை.

ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியின் (ADA) தலைவர் கிரிஷ் தியோதாரே கூறுகையில், அடுத்த ஆண்டுக்குள் CDR சமர்பிக்கப்பட்டு முதல் AMCA போர் விமானம் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் தயாராகி விடும். சுமார் நான்கு வருட சோதனைக்கு பிறகு 2028 மற்றும் 2029ல் போர் விமானத்தின் உற்பத்தியை தொடங்க இலக்கு வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

AMCA போர் விமானம் நான்கு மேம்பட்ட திறன்களை கொண்டுள்ளது. இதன் மூலம் எதிரியின் வான் பாதுகாப்பை அழிக்க முடியும். முதலாவதாக, இது திருட்டுதனமானது அல்லது எதிரி ரேடாரின் கண்ணுக்கு தெரியாது. இது ஒரு சூப்பர் குரூஸ் அல்லது ஒலியின் வேகத்தை விட வேகமாக பறக்க முடியும். மேலும் இதன் மேம்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் நெட்வொர்க் மைய செயல்பாடுகளுடன் இணைந்து பைலட்-விமானம் இணைப்பை மேம்படுத்துகிறது.

மேலும் இந்த AMCA நீண்ட தூரத்தில் இருந்து அதன் இலக்குகளை கண்டறிந்து செயல்பட முடியும். அதாவது அதன் எதிரிகளை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் முக்கிய பண்பு கண்டறியப்படுவதை தவிர்க்க ரேடார் அலைகளை சிதறடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் எரிபொருள் மற்றும் ஆயுதங்களை வழக்கமான போர் விமானத்தை போல் இறக்கைகளின் கீழ் இல்லாமல் அதனை உள்ளே மறைத்து வைத்திருக்கும். இதன் மூலம் ரேடார் அலைகள் பிரதிபலிப்பு தவிர்க்கப்படும். AMCA திருட்டுதனமான முறையில் 20 டன்கள் “ஆல்-அப்-வெயிட்” (AUP) கொண்டிருக்கும். அதன் உள் மறைத்து ஒன்றரை டன் மட்டுமே எடுத்து செல்லும்.

மற்ற போர் விமானங்களை போல இறக்கை பகுதிகளில் எடுத்து செல்வது என்றால் ஐந்து டன் வரை ஆயுத் எரிபொருளை கொண்டு செல்ல முடியும். போரின் போது 6.5 டன் எரிபொருளை உள் பகுதியில் மறைத்து எடுத்து செல்லும். இதன் வரம்பு ரகசியமாக இருந்தாலும், தோராயமாக 1,000 கிலோ மீட்டர் எதிரி இலக்குகளை தாக்கி அழித்து விட்டு மீண்டும் திரும்பு வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

Also Read: இந்திய இராணுவத்திற்கு குளிர்கால ஆடை.. தயாரிப்பு தொழிற்நுட்பத்தை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கிய DRDO..

மேலும் இது ஆயுதங்களை 1.5 விநாடிகளில் வெளியிட்டு மீண்டும் மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நீண்ட நேரம் என்றால் எதிரியின் ரேடார் கண்டறிய வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தின் மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுவது அதன் இஞ்சின் தான். AMCA போர் விமானத்திற்கு பொருத்தமான இஞ்சின் உருவாக்கப்படும் வரை, இரட்டை ஜெனரல் எலக்ட்ரிக் (GE) F-414 இஞ்சினால் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

Also Read: 5ஆம் தலைமுறை தேஜஸ் MK 2 போர் விமானத்திற்கு ஆர்டர் கொடுத்த இந்திய விமானப்படை?

AMCA சூப்பர்-க்ரூஸை உருவாக்க இரட்டை F-414 இஞ்சின் போதுமானதாக இருக்காது. ஏனெனில் ஒரு F-414 இஞ்சின் அதிகபட்சமாக 98 கிலோ நியூட்டன்களை (KiloNewtons KN) உருவாக்குகிறது. அதுவே இந்திய தட்பவெப்ப நிலைகளில் 90 KN ஆக இருக்கும். AMCA சூப்பர் க்ரூஸிங்கிற்கு இந்திய தட்பவெப்ப நிலைகளில் சுமார் 220 KN தேவை என கணக்கிடப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க ஆரம்ப நிதியை வெளியிட்டது பிலிப்பைன்ஸ்..

இதற்காக பெங்களூருவில் உள்ள கேஸ் டர்பைன் ரிசர்ச் எஸ்டாப்லிஸ்மென்ட் (GTRE) தலைமையிலான DRDO குழு AMCA எஞ்சினை உருவாக்கி வருகிறது. காவேரி எஞ்சின் அதிகபட்சமாக 83 KN உந்துதலை கொடுத்ததாக GTRE தெரிவித்தது. இப்போது இதனை 50 சதவீதம் அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. AMCAவை உருவாக்க 4 பில்லியன் டாலர் செலவாகும் என மறைந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மானோகர் பாரிக்கர் மதிப்பிட்டு இருந்தார்.

Also Read: இந்தியாவின் ரபேல் விமானங்களுக்கு எதிராக சீனாவின் J-10C போர் விமானத்தை வாங்கும் பாகிஸ்தான்..?

Leave a Reply

Your email address will not be published.