முகமது அலி ஜின்னா முதல் பிரதமராக இருந்திருந்தால் இந்திய பிரிவினை நடந்திருக்காது: ஓம் பிரகாஷ் சர்ச்சை பேச்சு
முகமது அலி ஜின்னா இந்தியாவின் முதல் பிரதமர் ஆகி இருந்தால் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை சந்தித்து இருக்காது என சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் நிறுவனர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அக்டோபர் 31 அன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பொதுகூட்டத்தில் பேசிய போது, முகமது அலி ஜின்னா, ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகிய நான்கு பேரும் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்தவர்கள் என கூறினார்.
மேலும் இந்த நான்கு பேரும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினார்கள் என கூறி சர்ச்சையை கிளப்பினார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இதற்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், முகமது அலி ஜின்னாவை சர்தார் வல்லபாய் பட்டேலுடன் ஒப்பிட்டது வெட்கக்கேடானது என விமர்சித்தார். சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டை ஒருங்கிணைத்தவர். ஆனால் முகமது அலி ஜின்னா நாட்டை பிரித்தவர் என யோகி தெரிவித்தார்.
பாஜக தலைவர்களின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் கூறிய ஓம் பிரகாஷ் ராஜ்பர், எல்.கே.அத்வானியும் ஜின்னா பற்றி இதே கருத்தை கொண்டுள்ளார். எல்.கே.அத்வானியின் கருத்தை படியுங்கள், அடல்ஜியின் கருத்துகளை படியுங்கள், ஜின்னாவை ஆதரிக்கும் மற்றவர்களின் கருத்துகளை படியுங்கள். அப்போது தெரியும் ஏன் ஜின்னாவை புகழ்ந்தார்கள் என்று ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறினார்.
Also Read: காலிஸ்தானுக்கு நிதி உதவி.. கனடா சென்ற தேசிய புலனாய்வு அமைப்பு..
இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என கூறி முஸ்லிம் அல்லாதோர் மீது அதாவது இந்துக்கள் மீது தாக்குதல் நடத்த முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஜின்னா அழைப்பு விடுத்தார். கடந்த 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதி அன்றைய இந்தியா இன்றைய பங்களாதேஷில் உள்ள நவகாளி கிராமத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
Also Read: இந்துக்களுக்கு எதிரான வன்முறைக்கு பாகிஸ்தானே காரணம்.. பங்களாதேஷ் பிரதமரின் மகன் குற்றச்சாட்டு..
இந்த கலவரத்தில் 4,000க்கும் மேற்பட்ட இந்துக்கள் உயிரிழந்தனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். இந்த கலவரம் ‘நேரடி நடவடிக்கை நாள்’ அல்லது ‘நவகாளி கலவரம்’ என அழைக்கப்படுகிறது. இந்த படுகொலைக்கு பிறகே பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்களுக்காக தனி நாடாக பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் இந்தோனேசிய முதல் ஜனாதிபதியின் மகள்..