ஈரான் எண்ணெய் கப்பலை சிறைபிடித்த கிரீஸ்.. பதிலுக்கு 2 கிரீஸ் கப்பலை கைப்பற்றிய ஈரான்..

மத்திய தரைக்கடல் பகுதியில் ஈரானிய எண்ணெய் கப்பலை கிரீஸ் கைப்பற்றியதை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிரீஸின் இரண்டு எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான். இது இருநாடுகளுக்கு இடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே அணுசக்தி தொடர்பாக மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த எண்ணெய் கப்பல் பிரச்சனை வெடித்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவலர் படை (IRGC) வெள்ளிக்கிழமை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அரேபிய வளைகுடாவில் இரண்டு கிரேக்க எண்ணெய் டேங்கர்களை தடைகளை மீறியதற்காக கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள கிரீஸ் ஈரானை கடற்கொள்ளையர்கள் என சாடியுள்ளது. இந்த நடவடிக்கைகள் கடற்கொள்ளையர்களுக்கு சமமானவை என கிரீஸ் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களை கிரீஸ் எச்சரித்துள்ளது. கிரீஸில் உள்ள ஈரானிய தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரலில் எண்ணெய் ஏற்றி சென்ற ரஷ்ய கொடியுடன் கூடிய ஈரான் டேங்கர்களை கிரீஸ் தடுத்து நிறுத்தியது. எண்ணெய் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்தது. இந்த நிலையில் கிரீஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை ஈரானிய கடற்படை ஹெலிகாப்டர்கள் கிரீஸ் டேங்கர்கள் மீது இறங்கியது. ஆயுத்தத்தை காட்டி மிரட்டி டேங்கர்களை சிறை பிடித்ததாக கூறப்பட்டுள்ளது.

அந்த இரண்டு டேங்கர்கள் டெல்டா போஸிடான் மற்றும் ப்ரூடென்ட் வாரியர் ஆகும். இதுதொடர்பாக கிரீஸ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன.

Also Read: நேட்டோவில் இணைய உள்ள பின்லாந்து.. சைமா பிரச்சனையை தூசி தட்டிய ரஷ்யா..

அதேபோல் ஈரான் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்ய கொடியுடன் கூடிய ஈரானிய எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது கிரீஸ். அமெரிக்காவின் தடைகளை அமல்படுத்தும் நோக்கில் அதில் உள்ள எண்ணெய்களை அமெரிக்காவிற்கு அனுப்ப வேறு கப்பல்களில் கிரீஸ் எண்ணெய்யை மாற்றியது.

Also Read: பாகிஸ்தானில் பொருளாதாரம், தண்ணீரை தொடர்ந்து தற்போது கோதுமை நெருக்கடி..?

கைப்பற்றப்பட்ட டேங்கரில் இருந்து 115,000 டன் ஈரானிய எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்ப உள்ளதாக கிரீஸ் புதன்கிழமை அறிவித்தது. ஈரானின் சரக்குகளை அமெரிக்காவிற்கு திட்டமிட்டு மாற்றுவது சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறல் என ஈரான் குற்றம் சாட்டியது. மேலும் தனது நாட்டு டேங்கரை விடுவிக்குமாறு வெள்ளிக்கிழமை கீரிஸை ஈரான் கேட்டுக்கொண்டது. இந்த நிலையில் தான் கிரீஸூக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிரீஸின் இரண்டு எண்ணெய் டேங்கர்களை ஈரான் கைப்பற்றியுள்ளது.

Also Read: கனடாவின் எதிரி அமெரிக்கா தான்.. கனடா உளவுத்துறை அறிக்கை தாக்கல்..?

Leave a Reply

Your email address will not be published.