ஹபீஸ் சயத் மகனை பயங்ரவாதியாக அறிவித்தது இந்திய அரசு..?

2008 நவம்பர் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சையதின் மகன் ஹபீஸ் தல்லாவை பயங்கரவாதியாக அறிவித்தது இந்தியா..

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் பயங்கரலாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த ஹபீஸ் சயித்தின் மகன் ஹபீஸ் தல்லா, லஷ்கர் இ தொய்பாவிற்கு ஆள் சேர்க்கும் வேலையை பார்த்து வருகிறான்.

மேலும் நிதி திரட்டுவது, ஆள் சேர்ப்பது, பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்துவது என பலவேறு குற்றசாட்டுகள் ஹபீஸ் தல்லா மீது உள்ளன. இந்த நிலையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் மூலம் ஹபீஸ் தல்லா சயீத்தை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் உள்ளான். சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்கடியால் ஹபீஸ் சியீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. இருப்பினும் சிறையில் பலவேறு வசதிகளுடன் ஹபீஸ் சயீத் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: 2 நாடுகளுடன் இணைந்து அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்க உள்ள அமெரிக்கா..?

இந்தியாவும் பயங்கரவாதிகளின் புகழிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக குற்றச்சாட்டியுள்ளது. ஆனால் அதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, நிதி அளிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் உறுதியானதால் FATF பாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் வைத்துள்ளது.

Also Read: ஹிஜாப் சர்ச்சை: கர்நாடகா மாணவியை பாராட்டிய அல்கொய்தா தலைவர்..!

Leave a Reply

Your email address will not be published.