குளோபல் ஃபயர்பவர்: இராணுவம் தொடர்பான ஆய்வில் இந்தியாவிற்கு எந்த இடம்?
பாதுகாப்பு மற்றும் இராணுவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா எந்த இடம்?
தற்போது உலகளாவிய ஃபயர்பவர் (Global Firepower or GFP) வருடாந்திர பாதுகாப்பு மதிப்பாய்விற்கு (தற்போது 2021 ஆம் ஆண்டை உள்ளடக்கிய) 138 நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாடும் ஒரு நீடித்த தாக்குதல் அல்லது தற்காப்பு இராணுவ நடவடிக்கை தொடர்பான பல காரணிகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இறுதியாக்கப்பட்ட குளோபல் ஃபயர்பவர் தரவரிசை இராணுவ வலிமை, இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, தளவாடங்கள் திறன் மற்றும் புவியியல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட காரணிகள் மூலம் நடத்தப்பட்டுள்ளது. இங்கே முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ள நாடுகள்:
1.அமெரிக்கா:
904 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 11 விமானந்தாங்கி கப்பல்கள் மூலம் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மேலும், 68 நீர்மூழ்கிக் கப்பல்களுடன் 40,000 கவச போர் வாகனங்களும் உள்ளன.
2.ரஷ்யா:
138 நாடுகளில் ரஷ்யா 2வது இடத்தில் உள்ளது. இதில் 789 போர் விமானங்களும், 538 தாக்குதல் ஹெலிகாப்டர்களும் உள்ளன. இதில் 13,000 டாங்கிகளும் 64 நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன.
3.சீனா:
சீனாவில் 1200 போர் விமானங்கள், 327 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 79 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. 3வது இடத்தில் உள்ளது, மற்றும் 35,000 கவச வாகனங்கள் உள்ளது
4.இந்தியா:
இந்தியாவிடம் 542 போர் விமானங்கள், 37 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 17 நீர்மூழ்கிக் கப்பல்கள், 4,730 டாங்கிகள் உள்ளன.
5.ஜப்பான்:
119 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 27 நாசக்கார கப்பல்கள், மற்றும் 2 ஹெலிகாப்டர் கேரியர்கள் இருப்பதால் ஜப்பான் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.