ஆளில்லா ரகசிய ட்ரோன் விமானத்தை உருவாக்கி வரும் இந்தியா! புதிய மைல்கல்லை எட்டியது?

இந்தியா ரகசியமாக ஆளில்லா 5ஆம் தலைமுறை ட்ரோன் விமானத்தை தயாரித்து வருகிறது.

இந்தியாவின் மிகவும் ரகசியமான காடக்(Ghatak) ஆளில்லா ட்ரோன் விமான திட்டம்(Unmanned Combat Aerial Vehicle) புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஆளில்லா விமானத்திற்காக உருவாக்கப்பட்ட லேண்டிங் கியரை டி.ஆர்.டி.ஓ.வின் சென்னையை சேர்ந்த ஆய்வகம் ஒப்படைத்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சென்னையை தளத்தில், காம்பாட் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், SWiFTக்கான(Stealth Wing Flying Testbed) லேண்டிங் கியர் அமைப்புகளை ஒப்படைத்துள்ளதாக Livefist தெரிவித்துள்ளது.

2020 அக்டோபரில் வெளியிடப்பட்ட ஒரு தொழில்நுட்ப அறிக்கையில், டி.ஆர்.டி.ஓ. இந்த திட்டத்திற்கான லேண்டிங் கியர் வடிவமைத்தல் பணியை முடித்துவிட்டதாகவும், ஏர்வொர்த்(Airworthy) பாகங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தது.

இந்த திட்டத்தின் மாதிரியை சமீபத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) கான்பூர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளது. மேலும் UCAV(Unmanned Combat Aerial Vehicle) திட்டம் தொடர்பாக அடிப்படை ஆராய்ச்சி மற்றும் சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளது. அது ஒரு துணை அளவிலான பறக்கும் மாதிரி (Sub-scale Flying Model) ஆக இருக்கலாம்.

காடக்(Ghatak) ஆளில்லா ட்ரோன் விமானம் ஆகும், இது கண்காணிப்புக்கு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கவும், மேலும் எதிரிகளின் ரேடாரில் இருந்து மறையவும் முடியும்.

DRDO பங்களிப்புடன் பெங்களூருவை தளமாகக் கொண்ட ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்சி யுசிஏவி யை உருவாக்கி வருகிறது.

இந்த திட்டம் முன்னதாக தன்னாட்சி ஆளில்லா ஆராய்ச்சி விமானம் அல்லது AURA (Autonomous Unmanned Research Aircraft ) என்று அழைக்கப்பட்டது.

இந்த திட்டம் இந்தியாவின் ஐந்தாவது தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானம் அல்லது AMCA (Advanced Medium Combat Aircraft) ஆகும்.

காடக் திட்டம் மே 2016ல் ஒப்புதல் பெறப்பட்டது. பின்பு 2017 ஆரம்பத்தில் இருந்து நிதி வர தொடங்கியதாக Livefist தெரிவித்துள்ளது.

இரகசியமான முறையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த திட்டம் பிரதமர் அலுவலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *