ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் பலி.. சம்பவ இடத்திற்கு விரைந்தார் IAF தலைவர் VR சவுதாரி..

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த குருப் கேப்டன் வருண் சிங் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.. இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சௌதாரி ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து வருகிறார்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்பு படை தளபதி CDS பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிக் LS லிடர், லெப்டினன்ட் கர்னல் H சிங், Wg Cdr PS சௌகான், Sqn Ldr K சிங், JWO தாஸ், JWO பிரதீப் K, Hav சாப்தால், Nk குருசேவக்சிங், NK ஜிதேந்தர், L/Nk விவேக், L/Nk S தேஜா ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். பிபின் ராவத் மறைவையொட்டி சென்னை தலைமை செயலகத்தின் அருகே உள்ள போர் நினைவு சின்னத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

CDS ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட இராணுவ அதிகாரிகள் இந்திய விமானப்படையின் MI-17V5 ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். கோவை சூளூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு பணியாளர் கல்லூரி நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டனர். ஹெலிகாப்டர் விபத்து பற்றிய முதல் தகவல் புதன்கிழமை மதியம் 12:20 மணிக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. மாலை 6 மணிக்கு பிறகு பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

விபத்து குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியதாவது, ஜெனரல் பிபின் ராவத் மரணம் நாட்டையே உலுக்கியது. ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்தின் அகால மரணம் குறித்து நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தேசம் அதன் துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்து விட்டது என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி கூறுகையில், தமிழ்நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை இழந்து விட்டதால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவர்கள் மிகுந்த விடா முயற்சியுடன் நாட்டுக்கு சேவை செய்தனர். என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன.

ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த இராணுவ வீரர். ஒரு உண்மையான தேச பக்தரான அவர், நமது ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்பு எந்திரங்களை நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்களித்தார். மூலோபாய விஷயங்களில் அவரது நுண்ணறிவு மற்றும் முன்னோக்குகள் விதிவிலக்கானவை. அவரது மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் முதல் CDS ஆக, பாதுகாப்பு சீர்திருத்தங்கள் உட்பட நமது ஆயுத படைகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் ஜெனரல் ராவத் பணியாற்றினார். ராணுவத்தில் பணியாற்றிய அனுபவத்தை தன்னுடன் கொண்டு வந்தார். அவரது சிறப்பான சேவையை இந்தியா என்றும் மறக்காது. ‘ஓம் சாந்தி’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Also Read: உலகின் முதல் 100 ஆயுத தயாரிப்பு நிறுவனங்களில் இடம் பிடித்த 3 இந்திய நிறுவனங்கள்..

இன்று பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 வீரர்களின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டு மாலை அஞ்சலி செலுத்தப்படுவதற்காக வைக்கப்பட உள்ளன. ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் தகனம் டிசம்பர் 10 ஆம் தேதி டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. ஜெனரல் பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Also Read: உயிரியல் போருக்கு தயாராக வேண்டும்.. BIMSTEC மாநாட்டில் பிபின் ராவத் எச்சரிக்கை..

ஏற்கனவே ஜெனரல் பிபின் ராவத் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி நாகலாந்தில் பயணம் மேற்கொண்ட போது அவர் சென்ற சீட்டா ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இருப்பினும் பிபின் ராவத் உயிர்பிழைத்தார். மியான்மர் மற்றும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலை முன்னிற்று நடத்தியவர். இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் சீனா தான் என கடந்த மாதம் 13 ஆம் தேதி கூறினார். இந்த நிலையில் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA சோதனை விமானத்திற்கு அடுத்த வருடம் அனுமதி..?

Leave a Reply

Your email address will not be published.