உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பணக்காரர் ஆனார் கௌதம் அதானி.. ஃபோர்ப்ஸ் வெளியீடு..

உலக பணக்காரர்கள் பட்டியலில் வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி அதானி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். கௌதம் அதானியின் வளர்ச்சி மேலும் அதிகரித்து வருவதாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அதானி குழுமத்தின் நிறுவனர் 59 வயதான அதானியின் நிகர மதிப்பு 123.7 பில்லியன் டாலர் என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் பஃபெட்டின் நிகர மதிப்பு 121.7 பில்லியன் டாலராக இருந்தது. இதன் மூலம் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி அதானி உலக பணக்காரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஊடகம், விமான நிலையங்கள் உட்பட பலவற்றில் முதலீடு செய்து விரிவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளதால், அதன் ஒவ்வொரு வணிகத்தின் பங்குகளும் 19 சதவீதம் முதல் 195 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பட்டத்து இளவரசரின் சகோதரரால் நடத்தப்படும் இன்டர்நேஷனல் ஹோல்டிங் கோ நிறுவனம், அதானியின் மூன்று பசுமை ஆற்றல் சார்ந்த நிறுவனங்களில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

ஜவுளி வியாபாரியின் மகனான அதானி, கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, 1988ல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கினார். 2008ல் முதன்முறையாக பில்லியனராக மாறி ஃபோர்ப்ஸ் வரிசையில் இணைந்தார். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 74 சதவீத பங்குகளை 2020 ஆம் ஆண்டு வாங்கினார்.

சாப்ட்பேங்கின் புதுப்பிக்கத்தக்கவை 3.5 பில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்தினார். இந்தியாவின் மிகப்பெரிய கடல்சார் சேவை நிறுவனமான ஒக்கேன் ஸ்பார்க்ல்-யை 220 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் வாங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 8.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதானியின் சொத்து மதிப்பு கொரோனாவிற்கு பிறகு 2021 மார்ச்சில் 50.5 பில்லியன் டாலராக உயர்ந்தது.

Also Read: இந்தியாவிடம் மேலும் 1.5 பில்லியன் டாலர் கடன் கேட்கும் இலங்கை..?

மார்ச் 2022ல் கிட்டத்தட்ட 90 பில்லியன் டாலராக உயர்ந்தது. தற்போது அதானி 123.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் பணக்காரராகவும், உலகின் ஐந்தாவது பணக்காரராகவும் உள்ளார். முகேஷ் அம்பானி 104.7 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அமெரிக்க பங்குசந்தையில் பெர்க்‌ஷயர் ஹாத்வேயின் பங்குகள் வெள்ளிக்கிழமை 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்தால் வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி அதானி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் தரவரிசையின் படி, முதல் இடத்தில் 269.7 பில்லியன் டாலர் மதிப்புடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் முதல் இடத்தில் உள்ளார்.

Also Read: மென்பொருள் சேவை துறையில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் என அறிக்கை..!

170.2 பில்லியன் டாலர் மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடத்திலும், பிரான்ஸ் ஆடம்பர பொருட்களின் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட் 167.9 பில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 130.2 பில்லியன் டாலர் மதிப்புடன் நான்காவது இடத்திலும், 123.7 பில்லியன் டாலர் மதிப்பில் ஐந்தாவது இடத்தில் அதானி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.