கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியாவின் முடிவை விமர்சித்த ஜி7 நாடுகள்..

ஜி7 நாடுகளின் குழுவின் விவசாய அமைச்சர்கள், உக்ரைன் ரஷ்யா மோதலால் கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ள நிலையில், இந்தியாவின் அங்கீகரிக்கப்படாத கோதுமை ஏற்றுமதியை தடை செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜெர்மன் விவசாய அமைச்சர் செம் ஓஸ்டேமிர் ஸ்டட்கார்ட்டில் கூறுகையில், எல்லோரும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினால் அல்லது சந்தைகளை மூடினால் அது நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என கூறியுள்ளார்.

உக்ரைன் மோதலால் ஏற்றுமதி தடைபட்ட நிலையில் ஜி7 நாடுகளுக்கு மேலும் ஒரு பின்னடைவாக இந்தியாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. போரின் காரணமாக குறைவான உற்பத்தி மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்களுக்கா இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

Also Read: டீஸ்டா நதி திட்டதிற்காக சீனாவிடம் 1B டாலர் கடன் கேட்கும் பங்களாதேஷ்..?

உக்ரைன் சேமிப்பு குடோனில் 20 மில்லியன் டன் கோதுமை இருப்பு உள்ள நிலையில், அவற்றை உடனடியாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என ஓஸ்டேமிர் கூறியுள்ளார். விளைப்பொருட்களை வெளியே எடுப்பது தொடர்பாக உக்ரைன் விவசாய அமைச்சர் ஜி7 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஸ்டட்கார்ட் சென்றுள்ளார்.

ஒடேசா. சோர்னோமோர்ஸ்க் மற்றும் பிற துறைமுகங்கள் ரஷ்ய போர்கப்பல்களால் உலகின் மற்ற பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டதால். உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி தற்போது தரை வழியாக மட்டுமே நடைபெறுகிறது.

Also Read: பொருளாதார நெருக்கடியால் 1 மில்லியன் அகதிகளை திருப்பி அனுப்பும் துருக்கி..?

இந்த நிலையில், ஜி20 உறுப்பினராக பொறுப்பேற்க இந்தியாவை நாங்கள் அழைக்கிறோம், மேலும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என ஓஸ்டேமிர் கூறியுள்ளார். ஜூன் மாதம் ஜெர்மனியில் நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் கோதுமை ஏற்றுமதி தொடர்பான தலைப்பை பேச வேண்டும் என விவசாய அமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.