ஆப்கனில் பெண்களின் உரிமை தொடர்பாக தாலிபானுக்கு ஜி20 நாடுகள் கேள்வி எழுப்ப வேண்டும்: இம்மானுவேல் மேக்ரான்

இந்த மாத இறுதியில் ரோமில் நடைபெற இருக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் ஆப்கானிஸ்தான் பிரச்சனை பற்றி உலக நாடுகள் விவாதிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது பற்றி ஜி20 உச்சி மாநாட்டில் விவாதத்தை எழுப்ப உள்ளதாக கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்து பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படுவதில்லை மற்றும் பெண்களும் வேலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக நாடுகள் தாலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மேக்ரான் கேட்டுள்ளார்.

தாலிபான் ஆட்சியில் பெண் குழந்தைகள் ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயர்நிலை பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை என கூறியுள்ளார். தாலிபான்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மேக்ரான் கூறியுள்ளார்.

பெண்களுக்கு அவர்களது உரிமைகளை வழங்கும் பட்சத்தில் ஆப்கன் அரசை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் மேக்ரான் கூறியுள்ளார். மேலும் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து செயல்படுவதை தாலிபான் நிறுத்த வேண்டும். மனிதாபிமான செயல்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Also Read: காபூலில் குண்டுவெடிப்பு.. அதற்கு காரணமான ஐஎஸ் அமைப்பினரை தேடி வரும் தாலிபான்கள்..

தற்போது ஆப்கனில் இளம்பெண்களுக்கு கல்வி உட்பட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில் இம்மானுவேல் மேக்ரான் அதுகுறித்து பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டில் இது குறித்து உலக நாடுகள் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தாலிபான் அரசுக்கு அங்கீகாரம் கிடைக்குமா இல்லையா என்பது ஜி20 மாநாட்டில் தெரிந்துவிடும்.

Also Read: ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை இயக்க இந்தியாவிற்கு தாலிபான் விமான போக்குவரத்து அமைச்சர் கடிதம்..

Leave a Reply

Your email address will not be published.