கன்ஹையா லால் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டல்.. 1.70 கோடி ரூபாயை கடந்தது..

கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட கன்ஹையா லால் மனைவியின் வங்கி கணக்கில் 1 கோடி ரூபாய் செலுத்தப்பட்டதாக பாஜக MLA கபில் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 28 ஆம் தேதி கன்ஹையா லால் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பதிவிட்டதற்காக அவரது தையல் கடையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கன்ஹையா லாலை இழந்த அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில் நிதி திரட்டும் அறிப்பை கபில் மிஸ்ரா வெளியிட்டார்.

நிதி திரட்டும் அறிவிப்பு வெளியிட்ட முதல் 24 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டியது. பின்னர் கன்ஹையா லாலை காப்பாற்றும் முயற்சியில் காயமடைந்த ஈஸ்வர் கவுடுக்கு உதவும் வகையில், 1,25 கோடியாக இலக்கு மாற்றப்பட்டது. மொத்தமாக 1.7 கோடி ரூபாய் வசூலான நிலையில் கன்ஹையா லால் மனைவியின் வங்கி கணக்கில் 1 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கன்ஹையா லாலை காப்பாற்றும் முயற்சியில் காயமடைந்த ஈஸ்வர் கவுடுக்கு உதவும் வகையில் 25 லட்சம் ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் என கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதேபோல் மகாராஷ்ட்ராவின் அமராவதியை சேர்ந்த வேதியியலாளர் உமேஷ் கோல்ஹேவும் இதே காரணத்திற்காக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டார்.

அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுதவிர உமேஷ் கோல்ஹே குடும்பத்தின் சட்ட போராட்டத்திற்கு உதவுவதாகவும் உறுதியளித்துள்ளார். மேலும் ராஜஸ்தானில் பணியின் போது ஒரு கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்ட சந்தீப் என்ற போலிஸ் கான்ஸ்டபிளுக்கு 5 லட்சம் வழங்கப்படும் எனவும் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள தொகை கன்ஹையா லாலின் மனைவியின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் என மிஸ்ரா தெரிவித்துள்ளார். மிஸ்ரா கன்ஹையா லால் மனைவியின் வங்கி கணக்கில் 1 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட பரிவர்த்தனை விவரங்களின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.