இங்கிலாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.. இராணுவத்தை பயன்படுத்த முடிவு..

இங்கிலாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் பற்றாக்குறையால் இங்கிலாந்து மக்கள் இடையே ஒரு குழப்பம் நீடிக்கிறது.

இந்த திடீர் பற்றாக்குறையால் மக்கள் பெட்ரோல் நிலையங்களை நோக்கி படையெடுத்துள்ளனர். சிறிய தண்ணீர் பாட்டில்களில் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கி சேமித்து வைத்துள்ளனர். இதனால் நிலைமை மேலும் சிக்கலாகிறது. இதற்கு காரணம் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதே காரணம் என கூறப்படுகிறது.

ஆனால் இங்கிலாந்து அரசு இதனை மறுத்துள்ளது. நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது என கூறியுள்ளது. ஆனால் எரிபொருள் நிலையங்களில் தினந்தோறும் 30,000 லிட்டர் விற்பனையாகும் நிலையங்களில் திடீர் என ஒரு லட்சம் லிட்டர் விற்பனையாகின்றன. இதனால் பெரும்பாலான விற்பனை நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டன.

மேலும் எரிபொருள் இருக்கும் ஒரு சில நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் எரிப்பொருள் வாங்கி செல்கின்றனர். ஒரு சில இடங்களில் எரிபொருள் வாங்குவது தொடர்பாக மக்கள் இடையே அடிதடி பிரச்சனையும் ஏற்படுகிறது. நிலைமை மோசமாவதை உணர்ந்த இங்கிலாந்து அரசு இராணுவத்தை தயார் நிலையில் வைத்துள்ளது.

அரசு தரப்பில் கூறும்போது எரிபொருள் தட்டுபாடு இல்லை, போதிய இருப்பு உள்ளது என கூறியுள்ளது. மேலும் எரிபொருளை எடுத்து செல்லும் கனரக வாகன ஓட்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தான் எரிபொருளை அந்தந்த நிலையங்களுக்கு சரியான நேரங்களில் கொண்டு சேர்க்க முடியவில்லை என கூறியுள்ளது.

எரிபொருள் நிலையங்களுக்கு எண்ணெய் வழங்கும் ஷெல், எக்ஸான்மொபில் மற்றும் கிரின்நெர்ஜி போன்ற எண்ணெய் நிறுவனங்களும் எரிபொருள் கையிருப்பு உள்ளதை உறுதி செய்துள்ளன. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்ததால் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சம் வாகன ஓட்டுநர்கள் தேவைப்படுவதாக இங்கிலாந்து கூறியுள்ளது.

Also Read: இந்தியா எங்களின் மிக முக்கியமான நண்பன்.. சர்வதேச பிரச்சனைகளில் இந்தியாவை ஆதரிக்கிறோம்: பெலாரஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்ததால் இங்கிலந்தில் வேலை பார்த்து வந்த ஐரோப்பிய ஓட்டுநர்கள் வேறு நாட்டிற்கு சென்றுவிட்டனர். மேலும் இங்கிலாந்து அரசு குடியுரிமை மற்றும் வரி மாற்றங்கள் செய்ததால் அவர்கள் இங்கிலாந்திற்கு திரும்பி வர விரும்பவில்லை. மேலும் கொரோனா தொற்றினால் ஊரடங்கு பிறப்பிக்கபட்டதாலும் அவர்கள் இங்கிலாந்து வர விரும்பவில்லை என கூறப்படுகிறது.

Also Read: இந்தியாவில் சிப் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தைவானுடன் பேச்சுவார்த்தை.. எச்சரிக்கும் சீனா..

ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையிலும் அவர்கள் இங்கிலாந்து வர விரும்பவில்லை. இதனால் இங்கிலாந்து அரசு குறைந்தது 5,000 வெளிநாட்டு கனரக லாரி டிரைவர்களுக்கு இலவச தற்காலிக விசா வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும் டிரைவர்கள் ஐரோப்பாவிலேயே வேலை பார்க்க விரும்புகின்றனர்.

டிரைவர்கள் கிடைக்காத பட்சத்தில் எரிபொருள் விநியோகத்திற்கு இராணுவத்தை பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இராணுவ வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கூறினார்.

Also Read: பின்னடைவில் சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம்.. சீனா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து வரும் ஆப்ரிக்க நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.