டிவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் வழக்கு..

டிவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது டிவிட்டர் கணக்கின் மீதான தடையை நீக்ககோரி ட்ரம்ப் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்தபோது அவரது ட்விட்டர் கணக்கை டிவிட்டர் நிறுவனம் முடக்கியது. டிவிட்டர் மட்டும் இல்லாது பேஸ்புக், யூடியூப் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களும் டொனால்ட் ட்ரம்ப் கணக்கை முடக்கினார்கள்.

வன்முறையை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக டிவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்தது. பிறகு தேர்தலில் ஜோ பிடன் வெற்றி அடைந்ததை அடுத்து வெற்றிக்கான சாற்றிதழ் வழங்கும் நேரத்தில் அமெரிக்காவில் கலவரம் வெடித்தது. இதனால் முன்னாள் அமெரிக்க அதிபரின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது டிவிட்டர் நிறுவனம்.

டிவிட்டரில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு 89 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருந்தனர். இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்பின் வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை ப்ளோரிடாவின் மியாமில் உள்ள நீதிமன்றத்தில் ட்விட்டர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் கூறுகையில் ஆப்கனில் தாலிபான்கள் டிவிட்டரை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் என்னுடைய கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எனவே தனது டிவிட்டர் கணக்கை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Also Read: இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டேன்: ஐநா பொதுச்சபை தலைவர் அப்துல்லா ஷாகித்

இது குறித்து டிவிட்டர் நிறுவனம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. பேஸ்புக் நிறுவனம் டொனால்ட் ட்ரம்பிற்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே தடை விதித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு மீண்டும் பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளது. அந்த நாட்டு அதிபரின் கணக்கையே சமூக ஊடகங்கள் தடை செய்திருப்பது அமெரிக்க மக்கள் மட்டும் இல்லாமல் உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: இங்கிலாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.. இராணுவத்தை பயன்படுத்த முடிவு..

இந்தியாவிலும் டிவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. இதேபோல் நைஜீரியாவில் டிவிட்டருக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. நைஜீரிய அதிபர் முகமது புஹாரி பிரிவினை அமைப்புகளுக்கு எதிராக பதிவிட்டிருந்தார். அதனை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது.

இதனால் டிவிட்டர் நிறுவனம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக நைஜீரிய அதிபர் டிவிட்டருக்கு தடை விதித்தார். பின்னர் இந்தியாவின் கூ செயலிக்கு அனுமதி வழங்கப்பட்டது. கூ செயலியில் நைஜீரியா அரசின் அதிகாரபூர்வ கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

Also Read: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆதரவு..

Leave a Reply

Your email address will not be published.