இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் முன்னாள் ஷியா வக்ஃப் வாரிய தலைவர்..

உத்திரபிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வி இஸ்லாம் மதத்தில் இருந்து இன்று முறைப்படி இந்து மதத்திற்கு மாறினார். ரிஸ்வியின் புதிய பெயர் ஜிதேந்திர நாராயண் சிங்.

இன்று காலை 10:30 மணி அளவில் தஸ்னா தேவி கோவிலின் தலைமை அர்ச்சகர் நரசிங்கானந்த சரஸ்வதி முன்னிலையில் இந்த சடங்கு நடைப்பெற்றது. சடங்கின் ஒரு பகுதியாக தஸ்ன தேவி கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தார். யாகத்திற்கு பிறகு முறைப்படி இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய போது வேத கீர்த்தனைகள் முழங்கப்பட்டன.

இந்து மதத்தில் இணைந்த பிறகு சனாதன தர்மத்தை உலகின் தூய்மையன மதம் என ரிஸ்வி குறிப்பிட்டார். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6 ஆம் தேதியை இந்து மதத்திற்கு மாறுவதற்காக தேர்ந்தெடுத்ததாக ரிஸ்வி தெரிவித்தார்.

இன்று முதல் நான் இந்து மதத்திற்காக பாடுபடுவேன். இஸ்லாமியர்களின் வாக்குகள் எந்த கட்சிக்கும் செல்வதில்லை, அவர்கள் இந்துக்களை தோற்படிப்பதற்காக மட்டுமே வாக்குகளை செலுத்துகிறார்கள் என குற்றம் சாட்டி உள்ளார்.

ரிஸ்வி கடந்த மாதம் ‘முஹம்மது’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். மேலும் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் 26 வசனங்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Also Read: இந்துக்களுக்கு எதிரான வன்முறைக்கு பாகிஸ்தானே காரணம்.. பங்களாதேஷ் பிரதமரின் மகன் குற்றச்சாட்டு..

முகமது நபிக்கு எதிராக ரிஸ்வி சர்ச்சைகுரிய கருத்து தெரிவித்ததாக இஸ்லாமிய மதகுருமார்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட சில மத அமைப்புகள் ரிஸ்விக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மற்ற சில அமைப்புகள் ரிஸ்வி மீது FIR பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: இந்துக்களுக்கு எதிரான வன்முறைக்கு பாகிஸ்தானே காரணம்.. பங்களாதேஷ் பிரதமரின் மகன் குற்றச்சாட்டு..

ஷியா முஸ்லிம் மற்றும் சன்னி முஸ்லிம் என இரு தரப்பிலும் புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். புத்தகத்தை எழுதியதற்காகவும், 26 வசனங்களை நீக்ககோரி வழக்கு தொடர்ந்ததாலும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ரிஸ்வி குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தான் இறந்த பிறகு தனது உடலை புதைக்க கூடாது என்றும், இந்து முறைப்படி எரிக்க வேண்டும் எனவும் ரிஸ்வி தெரிவித்தார்.

Also Read: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் இந்தோனேசிய முதல் ஜனாதிபதியின் மகள்..

Leave a Reply

Your email address will not be published.