இந்தியா RCEP வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறியது புத்திசாலித்தனமான நடவடிக்கை என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் பாராட்டு..
இந்தியா பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (RCEP) இருந்து வெளியேறியது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை என முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் ஆஸ்திரேலிய சிறப்பு வர்த்தக தூதர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் வெள்ளி அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அபோட், இந்தியா RCEP கூட்டாண்மையில் இருந்து வெளியேறியது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை, இதன் மூலம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தில் நாங்கள் கவனம் செலுத்த முடியும் என கூறினார்.
RCEP என்பது தென்கிழக்கு 10 ஆசிய நாடுகளை கொண்ட அமைப்பாகும். இந்த அமைப்பில் சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், கம்போடியா, புருனே, லாவோஸ், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாகும்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீனா அதன் மலிவான பொருட்களை மற்ற நாடுகளில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் குவித்து வந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டு இந்த RCEP ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகுவதாக அறிவித்தார்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் படி சீனா மற்றும் ஜப்பான் இந்தியாவை கேட்டுக்கொண்டன. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாராட்டிய அபோட், சீனாவை “ஆயுத வர்த்தகம்” என விமர்சித்தார். டெல்லியில் வியாழன் அன்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Also Read: இந்தியா ஏற்றுமதியில் இந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தை எட்டும்: வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல்
இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் முன்பாகவே அறுவடை வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.