முதன்முறையாக தந்தையும் மகளும் ஒரே போர் விமானத்தை இயக்கி வரலாற்று சாதனை..

இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஏர் கமடோர் சஞ்சய் சர்மா மற்றும் பறக்கும் அதிகாரி அனன்யா சர்மா ஆகியோர் இந்திய விமானப்படையின் முதல் தந்தை-மகள் இணைந்து போர் விமானங்களை இயக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளனர். பிடார் விமானப்படை தளத்தில் ஹாக்-132 போர் விமானத்தை ஒன்றாக இயக்கி சாதனைப்படைத்துள்ளனர்.

அனன்யா சர்மா சிறிய வயதில் இருந்தே தனது தந்தையை கவனித்து வந்திருக்கிறார். இதனால் அவர் விமானப்படையில் சேர்ந்து அதிகாரி ஆக வேண்டும் என முடிவு செய்து தற்போது போர் விமானியாக உயர்ந்துள்ளார். பறக்கும் அதிகாரி அனன்யா சிறந்த போர் விமானத்தில் பட்டம் பெறுவதற்கு முன் கர்நாடகாவின் பிதாரில் பயிற்சி பெற்று வருகிறார.

அனன்யா சர்மா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பிடெக் முடித்துள்ளார். 2016ல் இந்திய விமானப்படையின் பறக்கும் பயிற்சிக்கு அனன்யா சர்மா தேர்ந்ததெடுக்கப்பட்டார். அவர் டிசம்பர் 2021ல் போர் விமானியாக நியமிக்கப்பட்டார். அவரது தந்தை ஏர் கமடோர் சஞ்சய் சர்மா 1989 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் போர் விமானத்தில் பணியமர்த்தப்பட்டார்.

அவர் மிக்-21 ஸ்க்வாட்ரான் மற்றும் ஒரு முன்னணி போர் விமான நிலையத்திற்கு தலைமை தாங்கி போர் நடவடிக்கைகளில் விரிவான அனுபவம் பெற்றவர் ஆவார். இந்திய விமானப்படையில் தந்தையும் அவரது மகளும் ஒரு பணிக்காக ஒரே போர் விமானத்தின் ஒரு பகுதியாக இதற்கு முன்பு யாரும் இருந்தது இல்லை.

Leave a Reply

Your email address will not be published.