பாகிஸ்தானை தொடர்ந்து அதன் நட்பு நாடான துருக்கியையும் சாம்பல் நிற பட்டியலில் சேர்த்தது FATF..?

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்து வருவதால் பாகிஸ்தானை தொடர்ந்து அதன் நட்பு நாடான துருக்கியும் சாம்பல் நிற பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானிற்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

FATF எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு G7 நாடுகளால் 1989 அஇம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் 1991 ஆம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்தது. மொத்தம் 39 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக FATF உள்ளது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு மற்றும் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி அளித்து வருவதால் பாகிஸ்தான் 2018 ஆம் ஆண்டு முதல் சாம்பல் நிறபட்டியலில் உள்ளது.

FATF தடுப்பு பட்டியலில் உள்ளதால் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உட்பட பிற எந்த நிதி நிறுவனத்திடம் இருந்தும் பாகிஸ்தானால் கடன்பெற முடியாது. பாகிஸ்தான் சாம்பல் நிற பட்டியலில் இருந்து வெளியேற வேண்டுமானால் FATF கொடுத்த 34 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆனால் பாகிஸ்தான் 30 கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது.

மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற அழுத்தம் கொடுப்போம் என FATF தலைவர் பிளேயர் கூறினார். 30 அம்ச கோரிக்கையை நிறைவேற்றியதால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கவில்லை. மீதம் உள்ள 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் FATF கூட்டத்தில் பாகிஸ்தானை கருப்புநிற பட்டியலில் வைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என பிளேயர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் சாம்பல் நிற பட்டியலில் இருந்து கருப்பு நிற பட்டியலில் சேர்க்காமல் இருக்க FATFல் உறுப்பினராக உள்ள மூன்று நாடுகளின் ஆதரவு தேவை. இந்த நிலையில் சீனா, துருக்கி மற்றும் மலேசியா ஆகிய மூன்று நாடுகளின் ஆதரவால் பாகிஸ்தான் கருப்பு நிற பட்டியலில் சேர்க்கப்படாமல் சாம்பல் நிற பட்டியலிலேயே தொடர்கிறது.

Also Read: பாதுகாப்பு தடவாளங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதன்முறையாக இணைந்த இந்தியா..

இந்த நிலையில் சீனாவிற்கு அடுத்து பாகிஸ்தானின் மிக நட்பு நாடான துருக்கியின் நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருப்பதாக பிளேயர் கூறினார். பிரான்ஸ் விவகாரம் முதல் ஆப்கானிஸ்தான் விவகாரம் வரை பாகிஸ்தான் மற்றும் துருக்கி இரு நாடுகளும் ஒரே நிலையை பின்பற்றுவதாக பிளேயர் கடந்த சில வருடங்களாக துருக்கியை எச்சரித்தார்.

இந்நிலையில் தான் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவி அளித்ததாக துருக்கியை சாம்பல் நிற பட்டியலில் சேர்த்துள்ளது FATF. தற்போது துருக்கி சாம்பல் நிற பட்டியலில் இருப்பதால் பாகிஸ்தானிற்கு இரண்டு நாடுகளின் ஆதரவே உள்ளது. அடுத்த ஆண்டிற்குள் இன்னொரு நாட்டின் ஆதரவை பாகிஸ்தான் பெறாவிட்டால் ஏறக்குறைய கருப்பு நிற பட்டியலில் வைக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

Also Read: அகல பாதாளத்திற்கு செல்லும் பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு.. வரலாறு காணாத வீழ்ச்சி..

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் FATF கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்தியாவின் அழுத்தத்தினாலேயே எங்களை சாம்பல் நிற பட்டியலில் வைத்துள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இதனை மறுத்துள்ள பிளேயர் FATF 39 உறுப்பினர்களை கொண்ட சுதந்திரமான அமைப்பு. அனைவரும் ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பதிலடி கொடுத்துள்ளார். சமீப நாட்களாக பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீர் குறித்து துருக்கி இந்தியாவை சீண்டியது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாகிஸ்தான் கடற்பரப்பில் நுழைந்த இந்திய நீர்மூழ்கிகப்பல்.. பாகிஸ்தான் எதிர்ப்பு..

Leave a Reply

Your email address will not be published.