வான் இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்திரா MK-2வின் முதல் சோதனை நாளை நடக்க உள்ளது..
இந்தியாவின் வானிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்ட்ரா MK-2 ஏவுகணையை இந்த வாரம் சோதனை செய்ய உள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, ஒடிசா கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ரேஞ்ச் (ITR) காம்ப்ளக்ஸ் 3-ல் இருந்து சோதிக்கப்படும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. தரை ஏவுதளத்தில் இருந்து ஏவுகணை பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டு, அதன் உந்துவிசை மற்றும் ஊடுருவல் சரிபார்க்கப்பட்டவுடன், அது ஒரு போர் விமானத்திலிருந்து சோதிக்கப்படும்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பணிக்காக பாதுகாப்பு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் குழு ஒன்று சோதனை மையத்தில் முகாமிட்டுள்ளது. சோதனை பிப்ரவரி 18 முதல் 20 வரை நடக்க உள்ளது. இந்த ஏவுகணை ஏற்கனவே விமானத்தில் இணைக்கப்பட்டு இறுதி சோதனை நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், முதல் தேதியே ஏவுகணை ஏவப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்திய விமானப்படை (IAF) மற்றும் கடற்படைக்கு அஸ்ட்ரா Mk I ஐ வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்த பின்னர், சுமார் 7 மாதங்களுக்கு பிறகு அஸ்த்ரா Mk II-க்கான இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அஸ்திரா ஏவுகணையின் முந்தைய பதிப்பு 110 கிமீ தூரம் வரை இருக்கும் அதே நேரத்தில், அதன் மேம்பட்ட மாறுபாடு 160 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கக் கூடியதாக இருக்கும். மேம்படுத்தப்பட்ட ஜாமர் எதிர்ப்பு மற்றும் இரட்டை பல்ஸ் மோட்டார் உந்துவிசை த்ரஸ்ட் கட்டுப்பாடு கொண்டதாக(Dual pulse motor having thrust vector control) இருக்கும்.
இந்த ஏவுகணை Solid Fuel Ducted Ramjet மூலம் இயக்கப்படும், இது அதன் செயல்திறனையும், ஸ்ட்ரைக் ரேஞ்ச் வரம்பையும் அதிகரிக்கும் என பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.