காளி இறைச்சி உண்ணும், மதுவை ஏற்று கொள்ளும் என கூறிய திரிணாமுல் MP மீது FIR பதிவு..

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் MP மஹுவா மொய்த்ரா மீது மத்திய பிரதேசத்தின் போபால் போலிசார் FIR பதிவு செய்யப்பட்டுள்ளனர். மஹுவா மொய்த்ரா மீது பதிவு செய்யப்பட்டுள்ள மூன்றாவது FIR இதுவாகும்.

நேற்று இந்தியா டுடே கான்க்ளேவ் ஈஸ்ட் 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய மஹுவா மொய்த்ரா, மா காளி ஒரு இறைச்சி உண்ணும், மதுவை ஏற்று கொள்ளும் தெய்வம். நீங்கள் சிக்கிம் செல்லும்போது, அவர்கள் காளி தேவிக்கு விஸ்கி கொடுப்பதை பார்க்கலாம். ஆனால் நீங்கள் உத்திரபிரதேசத்திற்கு சென்றால், நீங்கள் அம்மனுக்கு விஸ்கியை பிராசாதமாக வழங்குவதாக சொன்னால் அவர்கள் அதை நிந்தனை என சொல்வார்கள் என மா காளி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

மஹுவா மொய்த்ரா கருத்துக்கு அவரது கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை தெரிவித்தது. கட்சி அறிக்கையில், இந்தியா டுடே கான்ளேவ் ஈஸ்ட் 2022 ல் மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள். அவற்றிற்கு கட்சி எந்த வகையிலும் பொறுப்பேற்காது, அந்த கருத்துக்கள் கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை. இதனை திரிணாமுல் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது என அறிக்கை வெளியிட்டது.

மஹுவா மொய்த்ராவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இந்து தெய்வங்களை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் போபால் காவல்துறை மஹுவா மொய்த்ரா மீது இந்திய தண்டனை சட்டத்தின் 295ஏ (மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் வேண்டும் என்றே தீங்கிழைக்கும் செயல்கள்) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

முன்னதாக மஹுவா மொய்த்ரா மீது மேற்கு வங்க மாநிலம் ரகுநாத்பூரை சேர்ந்த பாஜக தலைவர் ஜிதன் சாட்டர்ஜி மற்றும் பாஜக MLA விவேகானந்த பவுரி ஆகியோர் அளித்த புகாரின் பேரில் 2 FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக தலைவர் ஜிதன் சாட்டர்ஜி தனது புகாரில், மஹுவா மொய்த்ராவின் அநாகரீகமான கருத்துக்கள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறியுள்ளார்.

வழக்கு பதிவை அடுத்து மஹுவா மொய்த்ரா எடிவிட்டரில், தான் எதற்கும் பயப்படவில்லை, அதை பாஜகவில் கொண்டு வாருங்கள், நான் ஒரு காளி பக்தர், நான் எதற்கும் பயப்படவில்லை. உங்கள் புறக்கணிப்புகள் அல்ல, உங்கள் குண்டர்கள் அல்ல, உங்கள் போலிஸ் இல்லை மற்றும் மிக நிச்சியமான உங்கள் ட்ரோல் இல்லை, உண்மைக்கு படைகள் தேவைப்படாது என ட்வீட் செய்துள்ளார்.

மஹுவா மொய்த்ரா இதற்கு முன் ஏற்கனவே பல முறை இந்து தெய்வங்களை அவமதித்துள்ளார். கடந்த மே 2022ல் ஞானவாபி மசூதியன் சர்ச்சைகுரிய கட்டமைப்பில் சிவலிங்கம் கண்டுபிடிக்க நிலையில் சிவலிங்கத்தை அவமதித்ததாக மஹுவா மொய்த்ரா மீது புகார் அளிக்கப்பட்டது. மஹுவா மொய்த்ரா, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஒரு படத்தை பகிர்ந்து, இது தோண்டும் பட்டியலில் அடுத்தாக இல்லை என நம்புகிறேன் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.