பழங்குடியின குழந்தைகள் பெயரில் வசூலித்த நிதியை முறைகேடு செய்ததாக சமூக ஆர்வலர் மேதா பட்கர் மீது FIR பதிவு..

பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தியதாக மேதா பட்கர் உட்பட 12 பேர் மீது மத்திய பிரதேச போலிசார் FIR பதிவு செய்துள்ளனர்.

‘நர்மதா பச்சாவோ அந்தோலன்’ மூலம் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் மேதா பட்கர், நர்மதா பள்ளதாக்கு மக்களின் நலனுக்காவும், பழங்குடியின குழந்தைகளுக்காக பள்ளிகள் கட்டுவது மற்றும் கல்வி வழங்குவதாக கூறி 13 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து மேதா பட்கர் உட்பட 12 பேர் மீது மத்திய பிரதேசத்தின் பர்வானி காவல்துறையில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2007 முதல் 2022 வரை பழங்குடியின மக்களின் கல்விக்காக பெறப்பட்ட நன்கொடைகளுக்கு கணக்கு இல்லாததாலும், நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் பிரிதம் ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. அவர் இந்த நிதியை அரசியல் மற்றும் தேசவிரோத செயல்களுக்காக பயன்படுத்தியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

மேதா பட்கர் 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நர்மதா நவநிர்மான் அபியான் அறக்கட்டளை மூலம் 13 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டியுள்ளார். மேதா பட்கர் உடன் பர்வீன் ரோமு ஜஹாங்கீர், விஜயா சவுகான், கைலாஷ் அவஸ்யா, மோகன் படிதார், ஆஷிஷ் மாண்ட்லோய், சஞ்சய் ஜோஷி மற்றும் பலர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

நர்மதா நதியின் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக மேதா பட்கர், நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற பெயரில் போராட்டதை முன்னெடுத்தவர். இவர்களின் எதிர்ப்பு காரணமாக நர்மதா அணையில் சர்தார் சரோவர் அணை கட்டும் திட்டம் பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கட்டுமானம் தொடங்கிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தையும் நடத்தினர்.

நர்மதா பச்சாவோ அந்தோலன் மூலம் பணமோசடி செய்ததாக இந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி அமலாக்க இயக்குநரகம் (ED) மேதா பட்கருக்கு எதிராக FIR பதிவு செய்தது. இதே குற்றத்திற்காக வருவாய் புலனாய்வு துறை மற்றும வருமான வரித்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. மேதா பட்கரின் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் 1.2 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது.

மேதா பட்கரின் தொண்டு நிறுவனம் ஜூன் 18, 2005 அன்று ஒரே நாளில் 20 வெவ்வேறு நபரிடம் அல்லது அமைப்புகளிடம் இருந்து நிதியை பெற்றுள்ளது. இதில் ஆச்சரிய படும் வகையில் அந்த 20 நன்கொடைகளின் தொகையும் ஒன்றுதான். அதாவது, 20 நன்கொடையாளர்களும் தலா 5,96,294 ரூபாயை அனுப்பியுள்ளனர். நன்கொடையாளர்களில் ஒருவரான பல்லவி பிரபார் பாலேகர், நன்கொடை அனுப்பும் போது மைனராக இருந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.