நிதி முறைக்கேடு: விசாரணை வளையத்திற்குள் ZTE, VIVO உள்ளிட்ட சீன நிறுவனங்கள்..

சியோமியை தொடர்ந்து நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக ZTE மற்றும் VIVO மொபைல் சீன நிறுவனங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதனை கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தணிக்கையாளர் அறிக்கையை ஆய்வு செய்து வருகிறது.

ஏப்ரலில் நிதி மற்றும் உரிமை அறிக்கையில் முறைகேடுகள் உள்ளதா என்பதை கண்டறிய விவோ மீது விசாரணை கோரப்பட்டதாகவும், அதே நேரம் ZTE பதிவுகளை ஆய்வு செய்து அவசர அடிப்படையில் முடிவுகளை வழங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டனர்.

2020 முதல் லடாக் இமயமலை பகுதிகளில் இந்தியாவுடன் சீனாவும் பல தசாப்தங்களாக மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், சீன நிறுவனங்கள் முறைகேடு செய்வதாக எழுந்த புகாரை அடுத்து அந்நிறுவனங்கள் மீது ஆய்வு அதிகரித்துள்ளது. மோதலை அடுத்து அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட்டின் ஷாப்பிங் சேவைகள், பைட் டான்ஸ் லிமிடெட்டின் டிக்டாக் மற்றும் சியோமியின் மொபைல் செயலிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட சீன மொபைல் செயலிகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டன.

மேலும் குறைந்த வருமானம் உள்ளவர்களை இலக்காக கொண்ட ஒரு டஜன் சீன கடன் செயலிகளின் பயன்பாடுகளை இந்திய பாதகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த கடன் செயலிகள் தங்களது சீன கூட்டாளிகளுக்கு தரவை அனுப்புவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்தியாவில் உள்ள சில சீன நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநர் அறிக்கையின் படி, சில சீன நிறுவனங்கள் உண்மையான பொருட்கள் அல்லது சேவை ரசீதுகள் இல்லாமல் சில நிறுவனங்களிடம் இருந்து மோசடியான உள்ளீட்டு வரி கடன் பெறுகின்றன.

இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஜிஎஸ்டியை மாற்றி வசூலித்து வருவதாகவும், அதை டெபாசிட் செய்வதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் சில சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து, சினாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு சீன நாட்டவரை இயக்குநர்களாக அமர்த்தி, உண்மையில் சேவைகளை வழங்காமல் போலி விலைப்பட்டியல்களை வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வருமான வரி நிறுவனம், ZTE கார்ப்ரேஷன் நிறுவனத்திற்கு எதிராக சோதனைகளை நடத்தியது. அந்நிறுவனம் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான கோடி வரி கடன், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பல நிதியாண்டுகளாக மூலத்தில் வரியை கழிக்க இயலாமை ஆகியவற்றை கண்டறிந்துள்ளது.

மற்றொரு சீன தொழிற்நுட்ப நிறுவனமாக ஹூவாய், பல ஆண்டுகளாக தனது கணக்குகளை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிகையில் கூறப்பட்டுள்ளது. சியோமி மற்றும் ஓபோ இரண்டு நிறுவனங்களும் தொடர்புடைய நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளை வெளிபடுத்துவதற்கு ஐ.டி சட்டம் 1961 ல் பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆணையை மீறியது கண்டறியப்பட்டது.

Also Read: இந்திய கோதுமையை நிராகரித்த துருக்கி.. இந்தியா திரும்பும் கோதுமை கப்பல்..

நாட்டின் அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதற்காக சீன தொழிற்நுட்ப நிறுவனமான சியோமி நிறுவனத்திடம் இருந்து 5,500 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ததாக அமலாக்க இயக்குநரகம் முன்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் 500க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களின் கணக்குகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது.

அந்த நிறுவனங்களுக்கு இயக்குநர்கள், பங்குதாரர்கள், இறுதி பயனாளிகள் மற்றும் உரிமையாளர்கள் பற்றிய தகவல்களை கோரி அமைச்சகம் கடிதங்களை அனுப்பியுள்ளது. மீதமுள்ள நிறுவனங்களிடம் இருந்து தேவையான தகவல்களை பெறுவதற்கான செயல்பாட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜூலை மாதம் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கை கிடைத்த உடன் சீன நிறுவனங்கள் மீது விரிவான விசாரணை நடத்துவதா வேண்டாமா என அமைச்சகம் முடிவு செய்யும்.

Leave a Reply

Your email address will not be published.