சீனாவில் இருந்து இறக்குமதியை குறைக்க நிதி ஆயோக் தலைவர் வலியுறுத்தல்..?

சீனாவில் இகுந்து மின்சார வாகன உதிரி பாகங்கள் மற்றும் பிற வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதை குறைத்து இந்தியாவிலேயே அதனை உற்பத்தி செய்ய வேண்டும் என அரசு கொள்கை வகுக்கும் அமைப்பின் நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் காந்த் கூறினார்.

கடந்த ஆண்டு லடாக்கில் இந்தியா சீனா இடையே நடந்த மோதலை அடுத்து சீனாவின் மொபைல் செயலிகள் முற்றிலும் தடை செய்யப்பட்டன. பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட பிரபலமான செயலிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டன.

மேலும் சீனா, இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ததை தொடர்ந்து மத்திய அரசு இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகள் மத்திய அரசின் அனுமதி பெற்றுதான் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் என விதிமுறையை கொண்டு வந்தது.

மேலும் கொரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தன. இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டும் கொரோனா பெருந்தொற்றை தாக்கு பிடித்து தற்போது மீண்டும் உற்பத்தியை தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், மின் பாகங்கள், EV மோட்டார்கள் உள்ளிட்டவைகளுக்கு பயன்படும் காந்தம் மற்றும் மற்ற உதிர பாகங்களுக்கும் இந்தியா சீனாவை நம்பியே உள்ளது. எனவே இந்தியா தர்சார்பு நிலையை அடைய மோட்டார்களுக்கு பயன்படும் காந்தம் மற்றும் மின்சார உதிர பாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என அமிதாப் காந்த் கூறினார்

Leave a Reply

Your email address will not be published.