கொரோனா தடுப்பூசி விலையை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு வேண்டுகோள்..

கொரோனா தடுப்பூசிகளின் வெவ்வேறு விலைகளுக்கு மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விலையை மறுபரிசீலனை செய்யக்கோரி சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சீரம் நிறுவனம் தான் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ்க்கு 400 ரூபாய் எனவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒர் டோஸ்க்கு 600 ரூபாய் எனவும் விலை நிர்ணயித்துள்ளது.

அதேபோல் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் 600 ரூபாய் எனவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் 1200 ரூபாய் எனவும் விலை நிர்ணயித்துள்ளது.

மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி விலையை குறைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் தடுப்பூசி விலையை குறைக்க வலியுறுத்திய நிலையில் மத்திய அரசு சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இருநிறுவனங்களையும் விலையை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் விலையும் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *