ஃப்ரீ ஃபயர் உட்பட மேலும் 54 சீன ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடி தடை..?

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன ஆப்களுக்கு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகத்தின்(MeitY) அறிவுறுத்தலின்படி மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

தகவல் தொழிற்நுட்ப சட்ட பிரிவு 69(A) கீழ் உள்ள அவசர சட்டத்தின் கீழ் 54 செயலிகளை தடை விதிப்பதற்கான கோரிக்கையை உள்த்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின்படி, தடை விதிக்கப்பட்ட 54 செயலிகளில் இந்திய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட சில பயன்பாடுகள் உள்ளது. ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஆப்களில் சில ஆப்கள் மறுபெயரிட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக் கூறப்பட்டுள்ளது.

இவற்றில் சில ஆப்கள் தீங்கிழைக்கும் மென்பொருளை இயக்குவது அல்லது பயனர்கள் அனுமதியின்றி பயனர்களின் தரவுகளை நேரடியாக சீனாவில் உள்ள தரவு மையங்களுக்கு அனுப்புவதாக மத்திய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. \

மத்திய அரசு ஏற்கனவே Tiktok, Shareit, Wechat, Helo, Likee, UC News, Bigo Live, UC Browser, ES File Explorer, Mi Community போன்ற பிரபலமான சீன ஆப்களுக்கு மத்திய அரசு கால்வான் மோதலுக்கு பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதித்து உத்தரவிட்டது. தற்போது வந்துள்ள தகவலின்படி, Free Fire, Beauty Camera: Sweet Selfie HD, Beauty Camera: Selfie Camera, Equalizer & Bass Booster, Camcard for SalesForce Ent, Isoland 2: Ashes of Time Lite, Viva Video Editor, Tencent Xriver, Onmyoji Chess, Onmyoji Arena, AppLock and Dual Space Lite ஆகிய ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கால்வான் மோதலை அடுத்து ஜூன் 29, 2020 அன்று 59 ஆப்களும், அதனை தொடர்ந்து ஆகஸ்டு 10, 2020 அன்று 47 ஆப்களும், பின்னர் செப்டம்பர் 1, 2020 அன்று 118 ஆப்களும் நவம்பர் 19 அன்று 43 ஆப்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. தற்போது எந்தெந்த ஆப்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது என மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.