சேவையில் இருந்து விடைபெறுகிறது INS கோமதி போர் கப்பல்..
இந்திய கடற்படையின் கோதாவரி வகை கடைசி வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்கப்பலான INS கோமதி (F21) போர் கப்பல், 34 ஆண்டு கால சேவைக்கு பிறகு மே 28 ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட உள்ளது.
மும்பையில் உள்ள மசகான் டக் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட INS கோமதி போர் கப்பல் 72 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பாகும். 1984 மார்ச் 19ல் கட்டுமானம் தொடங்கப்பட்ட நிலையில், 1988 ஏப்ரல் 16 அன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு INS கோமதி போர் கப்பலில் புதிய ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இந்த போர் கப்பலில் பராக் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணை அமைப்பு, ஓட்டோ மெலரா 76 மிமீ துப்பாக்கி, நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோக்கள், 2 ஹெலிகாப்டர்கள் ஆகியவை அடங்கும்.
415 அடி நீளமும், 48 அடி அகலமும், மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. 34 வருட சேவைக்கு பிறகு 2022 மே 15 அன்று சேவையில் இருந்து நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், 2022 மே 28 அன்று முறைப்படி உத்திரபிரதேச அரசுக்கு மாற்றப்படுகிறது.
Also Read: உலகளவில் வலிமையான விமானப்படை.. சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..
பின்னர் INS கோமதி போர் கப்பல் பிரிக்கப்பட்டு லக்னோவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. INS கோமதியின் சேவையை நினைவு கூறும் வகையில், “கோமதி சௌரியா ஸ்மார்க்” என்ற அருங்காட்சியகம் நிறுவப்பட உள்ளது.
Also Read: மொரீஷியஸ் அகலேகா தீவில் இந்திய இராணுவ தளம்..? P-8I விமானத்தை நிறுத்த முடிவு..