இந்த நிதியாண்டில் 650 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு.. பியூஷ் கோயல் தகவல்..
நடப்பு நிதியாண்டில் சரக்கு ஏற்றுமதி 400 பில்லியன் டாலருக்கும், சேவை துறையில் 250 பில்லியன் டாலருக்கும் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களின் (EPC) மறுஆய்வு கூட்டத்தில் பேசிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பிபூஷ் கோயல். நடப்பு நிதியாண்டில் (FY22) சரக்குகள் மற்றும் சேவை துறையில் 650 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை எட்டும் பாதையில் நாடு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியா 300 பில்லியன் டாலர் அளவுக்கு சரக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும். அடுத்த நிதியாண்டில் இன்னும் கூடுதலாக சரக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என அமைச்சர் கூறினார். இந்த இலக்குகளை எட்டும் வகையில் அரசாங்கம் அவற்றை கையாண்டு அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் என EPCக்களுக்கு அமைச்சர் உறுதியளித்தார்.
ஒமிக்ரான் பரவல் இருந்தபோதிலும் டிசம்பர் மாதத்தில் மட்டும் 37 பில்லியன் டாலர் அளவிலான பொருட்களை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது டிசம்பரில் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர சரக்கு ஏற்றுமதி பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த மாதம் ஜனவரி 15 வரையிலான 15 நாட்களில் 16 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
2021 டிசம்பரில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 37.29 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இது 2020 டிசம்பரில் 27.22 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது 37 சதவீதம் அதிகமாகும், 2019 டிசம்பரில் ஏற்றுமதி 27.11 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது 37.55 சதவீதம் அதிகமாகும்.
Also Read: 2021 டிசம்பரில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை.. அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்..
2021 ஏப்ரல்-டிசம்பர் நிதியாண்டில் சரக்கு ஏற்றுமதி 299.74 பில்லியன் டாலர் ஆகும். இதே காலகட்டத்தில் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 201.37 பில்லியன் டாலர் ஏற்றுமதியை விட 48.85 சதவீதம் அதிகமாகும். மேலும் நடப்பு நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் சரக்கு ஏற்றுமதி அதிகமாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
Also Read: ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் கலவரம்.. பின்னணியில் சீனா.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..
புதிய யோசனைகளுக்கு செவிசாய்க்கவும், ஒவ்வொரு மட்டத்திலும் தொழில்துறையில் ஈடுபடவும், செயல்படுத்துபவராகவும், எளிதாக்குபவர்களாகவும், கூட்டாளராகவும் செயல்பட அரசாங்கம் தயாராக உள்ளது என்றும், பல்வேறு தடையற்ற வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளின் போது தொழில்துறை பிரதிநிதிகளின் கோரிக்கைகளை தொடர உறுதி அளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.