சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனே காலி செய்யுங்கள்.. பாகிஸ்தானுக்கு இந்திய தூதர் பதிலடி..

காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா தொடர்ந்து முறியடிக்கும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் காஜல் பட் கூறினார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய காஜல் பட், இந்தியா பாகிஸ்தான் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவை பேனவே விரும்புகிறது. சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின் படி, இரு நாடுகளுக்கும் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை அமைதியான முறையில் தீர்க்க இந்தியா முயன்று வருகிறது.

ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதன் மூலம் இந்த பிராந்தியத்தில் அமைதி இல்லா சூழல் நிலவுகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது பாகிஸ்தானின் பொறுப்பு. அதுவரை இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பதிலடி கொடுக்கும்.

பாகிஸ்தானின் ஐ.நா தூதர் முனீர் அக்ரம், ஐ.நா வழங்கிய தளங்களை தவறான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் வசதியாக வாழ்கிறார்கள். ஆனால் மக்களின் நிலை, குறிப்பாக சிறுபான்மை மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

மேலும் காஜல் பட் கூறுகையில், பாகிஸ்தானின் வரலாறு மற்றும் கொள்கை என்பது பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, பயங்கரவாதத்தை ஆதரிப்பது, பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதுதான் என கடுமையாக சாடினார்.

Also Read: துபாய் ஏர் ஷோ 2021.. வானில் பறந்த இந்தியாவின் தேஜஸ்.. பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்..

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, அவை பிரிக்க முடியாத பகுதியாக இருந்ததாகவும், இனி எப்போதும் இருக்கும் எனவும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரும் இதில் அடங்கும் என பட் கூறினார். மேலும் சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்யுமாறு காஜல் பட் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார்.

Also Read: பாலைவனத்தில் போர்கப்பலை மறைத்து வைத்து இரகசியமாக போர்பயிற்சியில் ஈடுபடும் சீனா..

அந்த நாடு பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது, பயிற்சி கொடுப்பது, நிதி உதவி, ஆயுத உதவி வழங்குவதையே அரசு கொள்கையாக வைத்துள்ளது என்பது உலக நாடுகளுக்கு தெரியும். ஐ.நாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு விருந்தளிக்கும் இழிவான சாதனையை அந்த நாடு செய்து வருவதாக பட் குற்றம் சாட்டினார்.

Also Read: கென்யாவில் தனது இரண்டாவது இராணுவ தளத்தை அமைத்து வரும் சீனா..? இந்தியாவை தாக்க திட்டமா..?

Leave a Reply

Your email address will not be published.