ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக எரிபொருள் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள்..

உக்ரைன் ரஷ்யா இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் வாங்கிய நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. CREA வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐரோப்பிய நாடுகளே ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவது தெரியவந்துள்ளது.

ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் (CREA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா தனது படையெடுப்பை தொடங்கிய பிப்ரவரி 24 முதல் ஏப்ரல் 24 வரை ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் 46.3 பில்லியன் டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்துள்ளன.

கடந்த ஆண்டு இதே இரண்டு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயை விட இந்த வருடம் இரண்டு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு அதிகரித்துள்ளது. CREA ஆய்வாளர் லாரி மைலிவிர்தா கூறுகையில், ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்ததை விட அதிக விலை கொடுத்தே வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது இறக்குமதி செய்த அளவு குறைவு, ஆனால் விலை ஏற்றத்தால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு அதிக விலை கொடுத்துள்ளன. கொரோனாவினால் ஊரடங்கு முடிந்து தொழிற்துறைகள் இயங்க தொடங்கியதால் கச்சா எண்ணையின் தேவை அதிகரித்துள்ளது.

Also Read: ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்ற பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி.. வெளிவந்த அறிக்கை..

இதனால் விலை ஏற்கனவே அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் மோதல் ஏற்பட்டு ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை இன்னும் அதிகமாக உயர்ந்துள்ளது. OPEC நாடுகளும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காததால் ஐரோப்பிய நாடுகள் அதிக விலை கொடுத்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகின்றன.

மேலும் ரஷ்யா ஐரோப்பிய நாடுகளை ரஷ்ய நாணயமான ரூபிளில் பணம் செலுத்த கூறியுள்ளது. ரூபிளில் செலுத்தவில்லை என்றால் எண்ணெய் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், போலந்து மற்றும் பல்கேரியாவிற்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தியுள்ளது.

Also Read: பாகிஸ்தானியருக்கு விசா வழங்குவதை நிறுத்தியது துருக்கி..?

இதன் மூலம் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ரூபிளில் பணம் செலுத்த ரஷ்யா அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் ஜெர்மனி எரிபொருள் வாங்குகிறது. படையெடுப்பிற்கு பிறகு 9.1 பில்லியன் யூரோ அளவிற்கு எரிபொருளை இறக்குமதி செய்துள்ளது.

ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இத்தாலி உள்ளது. படையெடுப்பிற்கு பிறகு 6.9 பில்லியன் யூரோவிற்கு இத்தாலி ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்துள்ளது. அடுத்த இடத்தில் சீனா உள்ளது. சீனாவை தொடர்ந்து நெதர்லாந்து, துருக்கி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன.

Also Read: லிதுவேனியாவில் இந்திய தூதரகம் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு..?

◌ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்த நிலையில், அமெரிக்காவும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்தது வெளிவந்துள்ளது. இருப்பினும் அமெரிக்காவை விட இந்தியா குறைவாகவே இறக்குமதி செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published.