சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்திற்கு எதிராக களமிறங்ரும் ஐரோப்பிய யூனியன்..

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் 300 பில்லியன் யூரோ அல்லது 340 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய உள்ளதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டிற்குள் இந்த திட்டத்திற்கு 340 பில்லியன் அமெரிக்க டாலர் மூதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் குளோபல் கேட்வே என கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஐரோப்பிய விநியோக சங்கிலியை வலுப்படுத்துவது, வர்த்தகத்தை மேம்படுத்துவது மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

மேலும் டிஜிட்டல் மயமாக்கல், போக்குவரத்து துறைகள், சுகாதாரம், காலநிலை, கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. சீனா 2013 முதல் தனது பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் முதலீடு செய்து வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள், குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது.

ஆனால் சீனா வழங்கும் நிதி பெரும்பாலும் சாதகமற்றது, இது வெளிப்படையானது இல்லை, இது ஏழை நாடுகளை கடனில் சிக்க வைக்கும் முயற்சி என ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது. சீனாவை போல் இல்லாமல் ஐரோப்பிய யூனியனின் குளோபல் கேட்வே திட்டமானது, வெளிப்படையானது, இதன் மூலம் உள்ளூர் நாடுகள் பயனடையும் என கூறியுள்ளது.

Also Read: ரூபேவின் அசுர வளர்ச்சி.. மாஸ்டர் கார்டை தொடர்ந்து விசாவும் அமெரிக்க அரசாங்கத்திடம் ரூபே மீது புகார்..

உண்மையில் சீனாவுக்கு மாற்றாக நாடுகளுக்கு சிறந்த மற்றும் மாறுபட்ட சலுகைகள் தேவை. இந்த திட்டத்தில் தனியார் துறைகளும் கொண்டுவரும் போது வளர்ச்சி சீரானதாக இருக்கும். மேலும் இந்த திட்டத்தில் அயாபம் குறைவாக இருக்கும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறியுள்ளார்.

Also Read: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 1.25 லட்சம் கோடிக்கு தீபாவளி விற்பனை.. சீனாவுக்கு 50,000 கோடிக்கு நஷ்டம்..?

இந்த 300 மில்லியன் நிதி, நிறுவனங்கள், அரசாங்கங்கள், ஐரோப்பிய யூனியன் நிதிநிறுவனங்கள் மற்றும் தேசிய வளர்ச்சி வங்கிகளில் இருந்து பெறப்படும் என கூறப்பட்டுள்ளது. மூன்றாம் நாடுகள் கடன் பிரச்சனையில் சிக்காமல் இருக்கும் வகையில் நியாயமான மற்றும் சாதகமான விதிமுறைகளின் கீழ் இந்த நிதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.பெல்ட் அண்ட் ரோட் திட்டத்திற்கு சீனா 2020 ஆம் ஆண்டு வரை 139 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: இந்தியா ஏற்றுமதியில் இந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தை எட்டும்: வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல்

Leave a Reply

Your email address will not be published.