எரிசக்தி டெண்டர்: மயான்மரில் சீனாவின் இடத்தை கைப்பற்றிய ரஷ்யா..?

மியான்மரில் தற்போது இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு கால்பதிக்க சீனா முயன்று வருகிறது. எரிசக்தி துறையில் கால்பதிக்க நினைத்த சீனா தற்போது அதை ரஷ்யாவிடம் இழந்துள்ளது.

மியான்மரில் தற்போது இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அதனை சீனா சட்டபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் மியான்மர் இராணுவத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவிக்க சீனா முயன்று வரும் நிலையில் மியான்மர் இராணுவம் சீனாவிடம் இருந்து விலகியே நிற்கிறது.

ஆங் சாங் சூகியின் முன்னாள் தேசிய ஜனநாயக லீக் அரசாங்கத்தின் கீழ் ஒப்பந்தம் போடப்பட்ட 26 சூரிய சக்தி டெண்டர்களை மியான்மர் இராணுவம் ரத்து செய்துள்ளது. மேலும் டெண்டர் சட்டங்களை மீறும் நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

முன்னாள் தேசிய ஜனநாயக லீக் அரசாங்கம், 1 ஜிகாவாட் திறன் கொண்ட 29 தரை மவுண்டட் சோலார் திட்டங்களை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுகளுக்கான கோரிக்கைகளை மே 2020 ஆம் ஆண்டு வெளியிட்டது. செப்டம்பர் 2020ல் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் அறிக்கை வெளியானது.

Also Read: இந்தோனேசியாவின் தடையால் மலேசியாவிடம் இருந்து பாமாயில் இறக்குமதி..?

அதில் சீன நிறுவனங்கள் 29 திட்டங்களில் 28 திட்டங்களை கைப்பற்றின. இப்போது இராணுவ ஆட்சியில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் டெண்டர் விதிமுறைகளை மீறியதற்காக தடுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளை விட குறைவாக விலையில் மின்சாரத்தை வழங்க முன்வந்ததால் சீனாவிற்கு 2020ல் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் இராணுவம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மனித உரிமை மீறல் மற்றும் பொதுமக்கள் இறப்பு அதிகரித்ததால் போராட்டம் தீவிரமடைந்தது. இதனால் சீனாவின் சுரங்க நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை மியான்மரில் இருந்து திரும்ப பெற்று வருகின்றன.

Also Read: கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியாவின் முடிவை விமர்சித்த ஜி7 நாடுகள்..

இந்த நிலையில் மின்பற்றாக்குறையால் ஒரு வாரத்திற்கு முன்பு நாட்டில் ஹைட்ரோகார்பன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல் படுத்த மியான்மர் இராணுவம் முடிவு செய்தது. இந்த திட்டத்தில் சீனாவை மியான்மர் இராணுவம் நிராகரித்தது. அதற்கு பதிலாக ரஷ்யாவுக்கு இந்த டெண்டர் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.