அமெரிக்காவில் ஆரம்ப பள்ளியில் துப்பாக்கிச்சூடு.. 18 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழப்பு..

டெக்சாஸில் உள்ள ஆரம்ப சுகாதார பள்ளியில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் மற்றும் 3 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சான் அன்டோனியாவுக்கு மேற்கே 80 மைல் தொலைவில் உவால்டே நகரில் உள்ள ராப் எலிமென்டரி பள்ளியில் இந்த துப்பாக்சிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. துப்பாக்கிச்சூடு நடத்திய 18 வயது நபர் சால்வடார் ராமோஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சால்வடார் ராமோஸ் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ராப் எலிமென்டரி பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து அங்கு உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் செவ்வாய் அன்று அமெரிக்க நேரப்படி மதியம் 12.17 மணிக்கு ராப் தொடக்கப்பள்ளியில் நடந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 சிறுமியும், 66 வயது பெண்ணும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு போலிசாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோபிடன் செவ்வாய் அன்று வெள்ளை மாளிகை மற்றம் பிற பொது இடங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

Also Read: உக்ரைன் ரஷ்யா மோதல்.. நார்ட் ஸ்ட்ரீம் திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பா முடிவு..?

வெள்ளை மாளிகை, அனைத்து பொது கட்டிடங்கள், மைதானங்கள், அனைத்து இராணுவ நிலைகள் மற்றும் கடற்படை நிலையங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அமெரிக்க அரசின் அனைத்து கடற்படை கப்பல்களிலும் அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என அதிபர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க தூதரகங்கள், தூதரக அலுவலகங்கள், அனைத்து ராணுவ வசதிகள், கடற்படை கப்பல்கள் மற்றும் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read: சீனா மீது தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானை தாக்குவதற்கு சமம்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

கடந்த 2018 ஆம் ஆண்டு புளோரிடாவின் பார்க்லேண்டில் உள்ள மார்ஜோரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டதற்கு பிறகு மிக மோசமான தாக்குதலாக தற்போது உவால்டே நகரில் உள்ள ராப் எலிமென்டரி பள்ளியில் நடந்த இந்த பதிவாகியுள்ளது.

Also Read: சாலமன் தீவை தொடர்ந்து மற்றொரு பசுபிக் நாட்டுடன் சீனா பாதுகாப்பு ஒப்பந்தம்..?

Leave a Reply

Your email address will not be published.