இழப்பீடு தொகையை கேட்டு எவர் கிவன் கப்பலை சிறை பிடித்தது எகிப்து அரசு..

சூயஸ் கால்வாயை முடக்கிய எவர் கிவன் பிரமாண்ட சரக்கு கப்பலை எகிப்து அரசு சிறை பிடித்துள்ளது. இழப்பீடு தொகையை வழங்கினால் மட்டுமே விடுவிக்க முடியும் என எகிப்து கூறியுள்ளது.

மார்ச் 23 அன்று ஒரு மணல் புயலில் சிக்கி உலக வர்த்தகத்தின் முக்கிய பகுதியான சூயஸ் கால்வாயில் 2 லட்சம் டன் எடை கொண்ட எவர் கிவன் கப்பல் குறுக்காக சிக்கிக்கொண்டது. ஜப்பானுக்கு சொந்தமான அந்த கப்பல் தைவானுக்கு இயக்கப்பட்டது. கப்பலில் பனாமா கொடி இயற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆறு நாட்களாக கப்பல் சிக்கிக்கொண்டது. தினமும் அவ்வழியாக 9.6 பில்லியன் டாலர் அளவிலான சரக்குகள் தேங்கி நின்றன. தினமும் 15 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக எகிப்து அரசு கூறியுள்ளது.

இதனால் எவர் கிவன் கப்பல் நிர்வாகம் 900 மில்லியன் இழப்பீடு தொகையை கட்டினால் மட்டுமே கப்பல் விடுவிக்கப்படும் என எகிப்து அரசு கூறியுள்ளது. கப்பல் சிக்கிகொண்ட போது வடக்கு மற்றும் தெற்கில் 420க்கும் மேற்பட்ட கப்பல் தேங்கி நின்றதாகவும் இதனால் தங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டதாகவும் எகிப்து கூறியுள்ளது.

எவர் கிவன் கப்பல் மூலம் ஏற்பட்ட இழப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள் அடிப்படையில் இழப்பீடு கோரப்பட்டுள்ளதாக எகிப்தின் பொருளாதார நீதிமன்றம் கூறியுள்ளது. இதனை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக எவர் கிவன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *