இந்திய கோதுமையை இறக்குமதி செய்ய உள்ள எகிப்து.. கோதுமை சப்ளையராக இந்தியா அங்கீகரிப்பு..!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கோதுமை இறக்குமதி செய்யும் நாடான எகிப்து இந்தியாவை கோதுமை சப்ளையராக அங்கீகரித்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்

எகிப்து 2020 ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து 1.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள கோதுமையையும், உக்ரைனில் இருந்து 610.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோதுமையையும் இறக்குமதி செய்துள்ளது. உக்ரைனும் ரஷ்யாவும் உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள். ஆனால் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளதால் உலக சந்தையில் கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அதனை பூர்த்தி செய்யும் இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியா கோதுமை உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா ஆண்டுதோறும் 107.59 மில்லியன் டன் கோதுமையை உற்பத்தி செய்கிறது. இருப்பினும் அதன் பெரும்பகுதி உள்நாட்டு நுகர்வுக்கு சென்று விடுகிறது.

இந்த நிலையில் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் ஒரு டிவிட்டில், இந்திய விவசாயிகள் உலகிற்கு உணவளிக்கிறார்கள், இந்தியாவை கோதுமை சப்ளையராக எகிப்து அங்கீகரித்துள்ளது. மோடி அரசு நிலையான உணவு விநியோகத்திற்காக நம்பகமான மாற்று ஆதாரங்களை உலகம் தேடும் போது அடியெடுத்து வைக்கிறது.

எங்கள் தானிய களஞ்சியங்கள் நிரம்பி வழிவதை உறுதி செய்துள்ளோம். மேலும் உலகிற்கு சேவை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 2020-21ல் 549.67 மில்லியன் டாலராக இருந்த நிலையில், 2021-22ல் 1.74 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது 2019-20ல் 61.84 மில்லியன் டாலராக இருந்தது.

Also Read: ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை 43 சதவீதம் அதிகரித்துள்ள அமெரிக்கா..?

உலக கோதுமை சந்தையில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. 2016 ஆம் ஆண்டு 0.14 சதவிதமாக இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு 0.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் எகிப்திய தூது குழு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. அவர்கள் மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாபில் உள்ள பல்வேறு செயலாக்க அலகுகள், துறைமுக வசதிகள் மற்றும் பண்ணைகளை பார்வையிட்டனர்.

வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த மாதம் துபாய் பயணத்தின் போது, எகிப்தின் பொருளாதார மேம்பாட்டு துறை அமைச்சர் ஹலா எல்-சைட்டை சந்தித்து எகிப்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உயர்தர கோதுமையை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக கூறினார்.

Also Read: இந்தியாவிற்கு பேரலுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க உள்ளதாக ரஷ்யா அறிவிப்பு..

வட ஆப்ரிக்க நாட்டின் கோதுமை மற்றும் சர்க்கரை இறக்குமதியை நிர்வகிக்கும் எகிப்தின் பொது கொள்முதல் நிறுவனமான APEDA, பொது விநியோகங்கள் மற்றும் பொருட்களின் பொது ஆணையத்தில் பதிவு செய்யுமாறு இந்தியாவின் ஏற்றுமதியாளர்களிடம் தெரிவித்து இருந்தது. இதன் மூலம் ஆப்ரிக்க நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யமுடியும்.

Leave a Reply

Your email address will not be published.