பாகிஸ்தானில் பொருளாதாரம், தண்ணீரை தொடர்ந்து தற்போது கோதுமை நெருக்கடி..?

பாகிஸ்தானில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறுவடை இரண்டு மெட்ரிக் டன்கள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மைக்கு மத்தியில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் கோதுமை நெருக்கடி உருவாகியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்த பருவத்தில் 28.9 மெட்ரிக் டன் கோதுமை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 26.9 மெட்ரிக் டன் மட்டுமே அறுவடை செய்ய முடியும் என கூறப்படுகிறது.

மார்ச் மாத நடுப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலை, உரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு போன்றவற்றால் இந்த ஆண்டு கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது. பாகிஸ்தான் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு நிதியளிக்க போராடும் நிலையில், எரிபொருள் மற்றும் மின்சார மானியங்களை அரசாங்கம் திரும்ப பெற்றுள்ளது.

சர்வதேச சந்தையில் கோதுமை விலை மேலும் உயரும் முன், கோதுமையை இறக்குமதி செய்து அதனை மானிய விலையில் தொழிற்துறைக்கு வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் போராடி வரும் நிலையில், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையுடன் தற்போது கோதுமை பற்றாக்குறையும் பாகிஸ்தானை விழிப்பிதுங்க செய்துள்ளது.

Also Read: 10 மாதங்களில் 14 பில்லியன் டாலர் கடன் வாங்கிய பாகிஸ்தான்.. உலக வங்கி அறிக்கை..

நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய அடுத்த அறுவடை வரை 30.8 மெட்ரிக் டன் கோதுமை தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு 26.9 மெட்ரிக் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். மேலும் ஒரு மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்ட்டுள்ளதால் பற்றாக்குறை 3.0 மெட்ரிக் டன்னாக உள்ளது.

Also Read: பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்ய இந்தியா ரஷ்யா இடையே ஒப்புதல்..?

பற்றாக்குறையை சமாளிக்க உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்ய விரும்பினாலும், கருங்கடல் பகுதியை ரஷ்யா முற்றுகையிட்டதால் உக்ரைனில் இருந்து ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. கருங்கடல் பகுதியில் இருந்து சுமார் 60 மில்லியன் டன் கோதுமை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அது தடைப்பட்டுள்ளது.

Also Read: கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: IMF

Leave a Reply

Your email address will not be published.