துருக்கியில் பொருளாதார நெருக்கடி.. முதலீடு செய்பவர்களுக்கு குடியுரிமை என அறிவிப்பு..

துருக்கியின் பொருளாதாரம் மோசமடைந்துள்ள நிலையில், பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் ஒரு பகுதியாக வெளிநாட்டினர் துருக்கியில் குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.

துருக்கி அதிபர் எர்டோகன் வட்டி விகிதங்களை அதிக அளவில் குறைத்துள்ளதால் துருக்கியின் பணவீக்கம் வரவாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. துருக்கியின் நாணயமான லிரா டிசம்பர் ஒரு டாலருக்கு எதிராக இந்த ஆண்டு 58 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இந்த நிலையில் துருக்கிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குசந்தைகளில் முதலீட்டை திரும்ப எடுத்து வருகின்றனர். மேலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதால் FATF துருக்கியை சாம்பல் நிற பட்டியலில் வைத்துள்ளது. இதனால் நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய குடியுரிமை விதிகளின் படி, நாட்டில் குறிப்பிட்ட அளவிற்கு முதலீடு செய்யும் அல்லது ரியல் எஸ்டேட் வாங்கும் அல்லது நிலையான மூலதன முதலீடு செய்யும் வெளிநாட்டினர் குடியுரிமை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

அதாவது துருக்கியில் 250,000 டாலர் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் வைத்திருக்கும் வெளிநாட்டினர் துருக்கிய குடியுரிமை பெற முடியும் என கூறப்படுகிறது. வெளிநாட்டினருக்கு சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு நாணயத்தை உள்ளுர் வங்கி மூலம் மத்திய வங்கிக்கு விற்கப்பட்டு துருக்கிய நாணயமாக மாற்றப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

முதலீட்டிற்கா வெளிநாட்டினர் வங்கியில் வைத்திருக்கும் பணமும் துருக்கிய நாணயமாக மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தை மீட்க முடியும் என துருக்கி அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இதே போன்ற அறிவிப்பை பாகிஸ்தானும் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.