துபாய் ஏர் ஷோ 2021.. வானில் பறந்த இந்தியாவின் தேஜஸ்.. பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்..

துபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய போர் விமானங்கள் பங்கேற்ற நிலையில், பாகிஸ்தானின் போர் விமானங்கள் கடைசி நேரத்தில் கண்காட்சியில் கலந்து கொள்ளாமல் பின்வாங்கியுள்ளன.

துபாயில் விமான கண்காட்சி ஞாயிற்றுகிழமை முதல் துவங்கியது. இதனை துபாய் இளவரசர் துவக்கி வைத்தார். இந்தியா சார்பில் 3 LCA தேஜாஸ் போர் விமானம், சூர்யகிரண் குழுவின் BAE ஹெவ்க் 132 வகையை சேர்ந்த 10 விமானங்கள் மற்றும் 5 துருவ் ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன.

பாகிஸ்தான் தரப்பில் சீனா, பாகிஸ்தான் தயாரிப்பான JF-17 போர் விமானம் பங்கேற்றது. இந்த விமானம் இந்தியாவின் ரபேல் விமானத்திற்கு இணையானது என பாகிஸ்தான் கூறியது. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை போலவே இந்த கண்காட்சியிலும் பாகிஸ்தானை சேர்ந்த நபர்கள் நிறைய பேர் பங்கேற்றனர்.

அதேபோல் இந்திய விமான கண்காட்சியை காணவும் இந்தியர்கள் நிறைய பேர் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்திய போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், பாகிஸ்தான் தரப்பில் பாகிஸ்தான் போர் விமானங்கள் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டது.

இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் பாகிஸ்தான் விமானப்படையை விமர்சித்து வருகிறார்கள். மேலும் சமூகவலைதலங்களில் இந்திய விமானங்கள் பங்கேற்ற நிலையில் பாகிஸ்தான் விமானங்கள் ஏன் பங்கேற்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

JF-17 விமானத்தில் பல பிரச்சனைகள் இருப்பதால் விமான கண்காட்சியில் பங்கேற்காமல் இருக்கலாம் என கூறப்படுகிறது. உலகிலேயே மிக குறைந்த செலவில் போர் விமானத்தை உருவாக்கி உள்ளதாக பாகிஸ்தான் பெருமை பட்டு கொண்டது. ஆனால் உண்மையிலேயே பாகிஸ்தான் மலிவான விலையில் தான் விமானத்தை உருவாக்கி உள்ளதாக பலர் பாகிஸ்தான் விமானத்தை விமர்சித்து வருகின்றன.

Also Read: 5 நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே.. பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை..

ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் வெளியிட்ட புகைப்படத்தில் JF-17 விமானதில் பைலட் இருக்கை அருகே நமது வீட்டில் கதவில் பயன்படுத்தப்படும் மெட்டலை கொண்டு வடிவமைத்து இருந்தது. இதனை பார்த்து பாகிஸ்தான் உண்மையிலேயே மலிவான விலையில் மலிவான பொருட்களை கொண்டு விமானத்தை கட்டமைத்துள்ளதாக விமர்சித்துள்ளனர்.

Also Read: பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் வல்லமை இந்தியாவிற்கும் உண்டு என்பதை உலகிற்கு காட்டியுள்ளோம்: ராஜ்நாத்சிங்

மேலும் JF-17 தண்டர் விமானத்தில் ரேடார் பிரச்சனை, துப்பாக்கி மற்றும் விமானம் மேலே பறக்கும் போதும், தரையிறங்கும் போது அதிர்வுகள் மற்றும் விரிசல்கள் ஏற்படுவதாக நிறைய புகார்கள் உள்ளனர். 2011, 2016, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்த JF-17 விமானம் விபத்தை சந்தித்துள்ளது.

Also Read: இந்தியாவில் இராணுவ தளத்தை அமைக்க உள்ள அமெரிக்கா..? அலறும் சீனா..

Leave a Reply

Your email address will not be published.