போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானின் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்திய BYJU’S நிறுவனம்..

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து ஷாருக்கான் உடனான அனைத்து ஒப்பந்தம் மற்றும் விளம்பரங்களை கல்வி நிறுவனமான BYJU’S நிறுவனம் நிறுத்தி உள்ளது.

BYJU’S நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக ஷாருக்கான் 2017 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். அவர் BYJU’S நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் ICICI வங்கி, ஹூண்டாய், LG, துபாய் சுற்றுலா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களிலும் ஒப்பந்தம் மேற்கொண்டு விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

மற்ற நிறுவனங்களை விட BYJU’S நிறுவனத்தின் மூலம் ஷாருக்கானுக்கு வருடத்திற்கு 3 முதல் 4 கோடி வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் ஷாருக்கான் மகன் போதை பொருள் பயன்படுத்தியதாக சில நாட்களுக்கு முன் கார்டிலியா குருஸ் சொகுசு கப்பலில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நெட்டிசன்கள் BYJU’S நிறுவனத்தை டேக் செய்து, தனது சொந்த குழந்தைக்கு சட்டப்பூர்வமாக செயல்பட கற்றுகொடுக்க முடியாத ஒருவரின் கற்றல் பயன்பாட்டை ஊக்குவிப்பது மற்றவர்களுக்கு தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என விமர்சித்தனர்.

Also Read: இந்தியாவின் நடவடிக்கையால் பணிந்தது இங்கிலாந்து.. இந்திய பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு..

மேலும் ஆர்யன்கான் கைதானதில் இருந்தே BYJU’S நிறுவனம் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் பின்னடைவை சந்தித்தது. இதனால் இதுவரை ஷாருக்கான் மூலம் எடுத்த அனைத்து விளம்பரங்களையும் நிறுவனம் நிறுத்தி உள்ளது. ஆனால் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதா அல்லது நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளதா என நிறுவனம் விளக்கவில்லை.

Also Read: டிவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் வழக்கு..

ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரது ஜாமீன் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பாலிவுட்டில் போதைபொருள் அதிகரித்து வரும் நிலையில் ஷாருக்கானின் மகன் 23 வயதான ஆர்யன் கான் கைதாகி இருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது..

Leave a Reply

Your email address will not be published.