இந்திய இராணுவத்தில் ஆளில்லா ட்ரோன் விமானப்படை.. முதன்முறையாக உலகிற்கு காட்சிபடுத்திய இந்தியா
இந்திய இராணுவத்தின் குட்டி விமானப்படை முதன்முறையாக உலகின் பார்வைக்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் 73வது இந்திய இராணுவ தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு நடைபெற்றது.
அதில் இராணுவத்தின் ஆளில்லா குட்டி விமான அணிவகுப்பும் நடந்தது. இதில் மொத்தம 75 ட்ரோன்கள் கலந்துகொண்டன. இந்த ட்ரோன் விமானப்படை விண்ணில் தொடர்ந்து பறந்தப்படியே எதிரி இலக்கை தேர்வு செய்து அதனை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. இந்த ட்ரோன் விமானங்கள் 50 கி.மீ தூரம் வரை ஊடுருவி எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் பெற்றவை.
இதனால் எதிரியின் எல்லைக்குள் 50 கி.மீ தூரம் வரை ஆளின்றி இந்த ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முடியும். மேலும் இதனை இயக்கும் இராணுவ வீரர்களால் எதிரிகளின் நடமாட்டத்தையும் கண்காணிக்க முடியும். மேலும் எதிரிகளின் வான் மற்றும் தரை இலக்குகளை இந்த ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்கி அழிக்க முடியும். இராணுவத்தில் ட்ரோன் விமானப்படை இருப்பதை முதன்முறையாக இந்திய இராணுவம் வெளி உலகத்திற்கு அறிவித்துள்ளது