போர் கப்பலில் இருந்து VL-SRSAM ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் இந்திய கடற்படை கப்பலில் இருந்து செங்குத்தாக ஏவப்பட்ட குறுகிய தூர மேற்பரப்பு ஏவுகணையை (VL-SRSAM) இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று அறிவித்துள்ளது.

இன்று ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் இந்திய கடற்படை கப்பலில் இருந்து இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. செங்குத்தாக ஏவப்பட்ட குறுகிய தூர மேற்பரப்பு ஏவுகணையானது, ஒரு கப்பல் மூலம் செல்லும் ஆயுத அமைப்பு, கடல்-ஸ்கிம்மிங் இலக்குகள் உட்பட நெருங்கிய வரம்பில் உள்ள பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை தாக்கி அழிக்க கூடியது.

இந்த அமைப்பின் இன்றைய ஏவுதல் அதிவேக வான்வழி இலக்கை பிரதிபலிக்கும் விமானத்திற்கு எதிராக நடத்தப்பட்டது என DRDO தெரிவித்துள்ளது. ஏவுகணையின் விமானப்பாதை மற்றும் அளவுருக்கள் ஐ.டி.ஆர், சண்டிபூரில் உள்ள பல கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்தி கண்காணிக்கப்பட்டன. சோதனை ஏவுதல் DRDO மூத்த அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது.

VL-SRSAM ன் வெற்றிகரமான விமான சோதனைக்காக DRDO மற்றும் இந்திய கடற்படைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் செங்குத்து ஏவுகணை குறுகிய தூர மேற்பரப்பு முதல் வான் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததற்காக DRDO, இந்திய கடற்படை மற்றும் தொழிற்துறைக்கு வாழ்த்துக்கள்.

இந்த வெற்றி வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்திய கடற்படை கப்பல்களின் பாதுகாப்பு திறனை மேலும் மேம்படுத்தும் என ராஜ்நாத்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல் கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், இந்திய கடற்படை மற்றும் DRDOவை பாராட்டினார். இந்த உள்நாட்டு ஏவுகணை அமைப்பின் வளர்ச்சி இந்திய கடற்படையின் தற்காப்பு திறன்களை மேலும் பலப்படுத்தும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.