மேம்படுத்தப்பட்ட பினாகா ER ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) சனிக்கிழமை அன்று நீட்டிக்கப்பட்ட ரேஞ்ச் பினாகா (Pinaka-ER) மல்டி பீப்பாய் ராக்கெட் லாஞ்சர் சிஸ்டத்தை பொக்ரான் மலைத்தொடரில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

புனேவில் உள்ள HEMRL உடன் இணைந்து DRDO ஆய்வக ARDE ஆல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பினாகா ER ராக்கெட் ஆனது முந்தைய பினாகாவின் மேம்படுத்தப்பட்ட அமைப்பாகும். பினாகா MK-1 ராக்கெட் சிஸ்டம் 40 கிலோமீட்டர் மற்றும் பினாகா MK-2 60 கிலோமீட்டர் தாக்குதல் தூரத்தை கொண்டுள்ளது.

மேலும் தொழிற்நுட்ப பரிமாற்றத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பினாவுக்கான வெடிமருந்துகளின் ADM வகைகளும் பொக்ரான் எல்லையில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. 24 ராக்கெட்கள் வெவ்வேறு வீச்சுகளில் போர்கப்பல் திறன்களுக்காக ஏவப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 11 அன்று பொக்ரான் மலைத்தொடரில் இரண்டு வெவ்வேறு வரைகள் ஒரே நேரத்தில் சோதனை செய்யப்பட்டன. முதலில் சோலார் இண்டஸ்ட்ரீஸ் மூலம் உருவாக்கப்பட்ட பினாகா ER சோதனை செய்யப்பட்டது. இரண்டாவதாக யந்த்ரா இந்தியா லிமிடெட் தயாரித்த பினாகாவுக்கான ADM சோதனை செய்யப்பட்டது. இரண்டு சோதனைகளும் வெற்றி அடைந்ததாக DRDO கூறியுள்ளது.

Also Read: பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் வான் பதிப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO..

1998 முதல் பினாகா தயாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பினாகா MK-1 37.5 கிலோமீட்டர் தாக்குதல் தூரமும், ADM 37.5 கிலோமீட்டர் தூரமும், பினாகா MK-1 மேம்படுத்தப்பட்ட ராக்கெட் 45 கிலோ மீட்டர் தூரமும், பினாகா MK-2 60 கிலோமீட்டர் தூரமும், வழிகாட்டப்பட்ட பினாகா 75 கிலோமீட்டர் தூரமும், தற்போது சோதனையில் உள்ள ERR-122 40 கிலோமீட்டர் தூரமும், தற்போது சோதனை செய்யப்பட்ட MK-II ER 90 கிலோ மீட்டரும், சோதனையில் உள்ள MK-III 120 கிலோமீட்டர் தாக்குதல் தூரத்தையும் கொண்டுள்ளது.

Also Read: அட்லாண்டிக் நாடான ஈக்குவோடரியல் கினியாவில் இராணுவ தளத்தை அமைக்க உள்ள சீனா.. இந்தியாவுக்கு ஆபத்தா..?

Leave a Reply

Your email address will not be published.